ஆசாமி என்றொரு படம். போலிச் சாமியார்களின் வேடத்தைப் புட்டுபுட்டு வைப்பதாகக் கூறி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் பீர் அடித்துவிட்டு குஜாலாக குறி சொல்லும் போலிச் சாமியாராக ஷகிலா நடித்திருக்கிறார். அவருக்கு நான்கு கைத்தடிகள் வேறு. சந்தானபாரதி, பாண்டு, நெல்லை சிவா மற்றும் அனுமோகன்தான் அந்த நால்வர்!
படத்தில் ஷகிலா வரும் காட்சிகளிலெல்லாம் ஜில்லென்று ஒரு கேஸ் பீரும் கொடுக்கப்பட்டதாம்.
அவரும் ஏக்தம்மில் பீரைப் போட்டுவிட்டு, காட்சியை ஒரிஜினலாக நடித்துக் கொடுத்தாராம்.
போதைக்கு ஷகிலா என்றால், பக்திப் பரவசத்துக்கு ஒரு சிறுமியை சாமியாகவே நடிக்க வைத்திருக்கிறார்களாம். அவர் வரும் காட்சிகளில் பெண்களுக்கு சாமி வருவது உறுதி என்கிறார் தயாரிப்பாளர் நம்பிக்கையுடன்.
போதை ஒரு பக்கம், பக்தி மறுபக்கம்... அட நெசந்தான்ல!
Post a Comment