ஷங்கர் படத்தில் நடிக்கிறேனா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் நடிப்பதாக வந்த தகவல் குறித்து பதில் அளித்துள்ளார் தீபிகா படுகோன். இது பற்றி அவர் கூறியதாவது: ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறேன் என என்னைப் பற்றி தகவல்கள் வருகிறது. இதை நானும் இன்டர்நெட்டில் படித்தேன். இந்த செய்தி எனக்கு வியப்பை அளித்தது. காரணம், அந்த படம் சம்பந்தமாக இதுவரை யாரும் என்னிடம் பேசவே இல்லை. ஷங்கருடன் அதில் நடிப்பது பற்றியும் நான் எதுவும் பேசவில்லை. ÔஐÕ படத்தில் நான் நடிப்பதாக சொல்வதில் சிறிதும் உண்மையில்லை.

தமிழில் ஒரே ஒரு படத்தில் நடிக்கிறேன். அது 'கோச்சடையான்'. ரஜினிக்கு ஜோடி. இந்தியில் சைப் அலிகானுடன் 'ரேஸ் 2', ரன்பீர் கபூருடன் 'ஏ ஜவானி ஹே திவானி' படங்களில் நடிக்கிறேன். இது தவிர மேலும் 2 இந்தி படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. இதனால் வேறு படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக நடித்து வெளியான 'காக்டெய்ல்' படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதற்காக சமீபத்தில் பார்ட்டி வைத்திருந்தேன். அதில் எனது நெருங்கிய சினிமா நண்பர்கள் கலந்துகொண்டனர். பார்ட்டியில் நிறைய அரட்டை அடித்தோம். அடிக்கடி இதுபோல் பார்ட்டி நடத்த விரும்புகிறேன். இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்.


 

Post a Comment