தனுஷ் சார் இனி பிஸி தான்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தற்போது தனுஷ், பரத் பாலா இயக்கும் 'மரியான்' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் ஒரு பகுதியை வெளிநாட்டில் முடித்து விட்டு 'மரியான்' படக்குழு தற்போது தான் தாயகம் திரும்பி இருக்கிறது. இதனையடுத்து மரியான் படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாக படக்குழ தெரிவித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் 'வந்தே மாதரம்' பாடலை இயக்கிய பரத் பாலா தான் 'மரியான்' படத்தின் இயக்குனர். 'மரியான்' படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளார். இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் படத்தை இயக்குகிறார். தயாரிப்பு வேலை முடிந்த பிறகு, ஒரே சமயத்தில் 'மரியான்', சற்குணம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடிக்கப் போகிறாராம் தனுஷ். அதுமட்டுமின்றி இந்தியில் தான் ஹீரோவாக நடித்து வரும் Raanjhnaa படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தனுஷ் சார் இனி பிஸி தான்.


 

Post a Comment