டெல்லி: முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான சாரா ஜேன் தியாஸ் பரிதாபாத்தில் நடந்த படவிழாவின்போது தாக்கப்பட்டார். இதில் அவரது உதடு கிழிந்தது. அவரைத் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
‘தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாரா ஜேன் தியாஸ்.
தற்போது ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்திப் படம் ‘கியா சூப்பர் கூல் ஹைய் ஹம்' மில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ் தேஷ்முக், துஷார் கபூர் மற்றும் நேகா சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் அறிமுக விழா அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்றது. அப்போது சாரா, சக நடிகைகளுடன் விழா மேடையில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூட்டத்திலிருந்து கல் வீசினார். அந்தக் கல் சாராவின் உதட்டைத் தாக்கியதில், உதடு கிழிந்தது!
"என் வாழ்க்கையில் முதல் முறையாக இப்படி ஒரு தாக்குதலுக்கு உள்ளானேன். என்னை மிகவும் அவமானப்படுத்திய சம்பவம் இது. எனது முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியாக இருக்கலாம்,' என்று சாரா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment