சென்னை: சூர்யாவின் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக சிங்கப்பூரில் நடக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசைக் கச்சேரியுடன் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 150 பேர் கொண்ட படக்குழு மற்றும் கலைஞர்கள் சிங்கப்பூர் செல்கின்றனர்.
ஆகஸ்ட் 9-ம் தேதி (வியாழக் கிழமை) சிங்கப்பூர் எக்ஸ்போ ஹாலில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் ஹரிச்சரண், வேல்முருகன், விஜய்பிரகாஷ், விஜய் பாலகிருஷ்ணன், எம்கே பாலாஜி, சுசித்ரா, சுனிதா சாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும் நிகழ்ச்சியின் இடையே நடிகைகள் மற்றும் நடனக் குழுவினரின் ஆட்டமும் உண்டு. இதில் நடிகைகள் பூர்ணா, நீது சந்திரா, தன்ஷிகா, ஜூலியா பயஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிருந்தா இவர்களுக்கு நடனப் பயிற்சி அளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஸ்நேகா, பிரசன்னா, திவ்யா, சோனியா அகர்வால், காஜல் அகர்வால், இயக்குநர்கள் லிங்குசாமி, கவுதம் மேனன், ஹரி, ஏ எல் விஜய் மற்றும் மாற்றான் படக்குழுவினர் சிங்கப்பூர் செல்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 5000 பேர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment