மாத்ரு தேவோ பவா ரீமேக்கில் ஜெயபிரதா

|

Jayaprada Matru Devobhava S Remake

ஆந்திர மக்களின் நினைவில் என்றும் இருக்கும் தெலுங்கு படமான மாத்ரு தேவோ பவா போஜ்புரியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயபிரதா நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆகாசதூது என்ற படம் 1993ம் ஆண்டு தெலுங்கில் மாத்ரு தேவோ பவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கே. அஜய்குமார் இயக்கத்தில் மாதவி மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை கே.எஸ். ராமா ராவ் தயாரித்தார்.

19 ஆண்டுகள் கழித்து இந்த படம் போஜ்புரியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை தயாரித்து கதாநாயகியாக நடிப்பவர் நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயபிரதா. அவருக்கு ஜோடியாக முன்னணி போஜ்புரி நடிகர் மனோஜ் குமார் நடிக்கிறார். தினக் கபூர் இயக்குகிறார்.

அரசியலில் குதித்த பிறகு படங்களில் இருந்து சற்று விலகியே இருந்த ஜெயபிரதா இந்த படம் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். எதிர்காலத்தில் பல படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

 

Post a Comment