எஸ்ஏசி மீது நம்பிக்கையில்லை; பொதுக்குழுவைக் கூட்டுங்க - 194 தயாரிப்பாளர்கள் அறிக்கை

|

194 Producers Urge Convene General Body Meet

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் மீது நம்பிக்கையில்லை. பொதுக்குழுவை கூட்டுங்கள், என்று கூறி 194 தயாரிப்பாளர்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

பட அதிபர்கள் கே.ராஜன், கலைப்புலி ஜி.சேகரன், ஜே.வி.ருக்மாங்கதன், கே.விஜயகுமார், கே.எஸ்.சீனிவாசன், கே.முருகன், ஜாகுவார் தங்கம், ஆர்.வடிவேல் உள்பட 194 பட அதிபர்கள் கூட்டாக ஒரு அறிக்கை விடுத்துள்ளனர்.

அதில், "எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் உள்ள பட அதிபர்கள் சங்க நிர்வாகக்குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களது செயல்பாடு நேர்மையாக இல்லை. அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, நீண்ட அடிப்படையிலான திட்டங்களை நிறைவேற்றவோ அவர்கள் முயற்சிக்கவில்லை.

பெப்சி தொழிலாளர்கள் ஊதியப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ட்ரஸ்ட் நிதியும் முறையாக பராமரிக்கப்படவில்லை.

ஆகவே 30 நாட்களுக்குள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் தீர்மானத்தை நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட பொதுக்குழு ஒன்று ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் கூட்டப்பட வேண்டும்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

Post a Comment