நயன்தாரா படத்திலிருந்து இயக்குநர் பூபதி பாண்டியன் விலகல்!

|

Boopathy Pandiyan Walks Of Nayanthara Movie   

ஹைதராபாத்: நயன்தாரா - கோபிச்சந்த் நடிக்கவிருந்த பிரமாண்ட படமான ஜெகன் மோகன் ஐபிஎஸ்-லிருந்து விலகிக் கொண்டார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை போன்ற படங்களை இயக்கியவர் பூபதி பாண்டியன்.

நயன்தாரா - கோபிச்சந்த் நடிக்க, ஜெகன் மோகன் ஐபிஎஸ் படத்தை இவர் இயக்கவிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக தயாராகவிருந்தது இந்தப் படம்.

சில மாதங்களுக்கு முன் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது இந்தப் படம்.

ஆனால் அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லையாம். இதுகுறித்து இயக்குநர் பூபதி பாண்டியன் கூறுகையில், "ரொம்ப நாளா வெறும் டிஸ்கஷன்லயே இருந்தது இந்தப் படம். என்னுடைய ஸ்க்ரிப்டில் ஏகப்பட்ட மாறுதல் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. குறிப்பா கோபிசந்த் தன் இமேஜுக்கு ஏத்த மாதிரி இப்படி மாத்து, அப்படி மாத்துன்னு சொல்லிக்கிட்டே இருந்தது. எனக்கு நம்பிக்கை போயிடுச்சி. மனதளவில் பெரிய டார்ச்சரா இருந்தது. அதான் படத்திலிருந்து நான் விலகிக்கிட்டேன்..," என்றார்.

பூபதி பாண்டியன் விலகியதைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் ஸ்ரீவாஸ் இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பையும், வேறு à®'ரு தமிழ் இயக்குநரும் தமிழ்ப் பதிப்பையும் இயக்கப் போகிறார்களாம்.

'யாரை வச்சு வேணும்னாலும் இயக்கிக் கொள்ளட்டும். நான் என் ஸ்க்ரிப்டை கொடுத்தேன். அவர்கள் எக்கச்சக்க மாறுதல் செய்து, அது என் ஸ்க்ரிப்ட்தானா என கேட்குமளவுக்கு வைத்துவிட்டனர். விரைவில் வேறு படத்தை அறிவிப்பேன்," என்றார்.

 

Post a Comment