மும்பை: காய்ச்சல், உடல் சோர்வால் அவதிப்பட்ட பாலிவுட் நடிகை பிபாஷா பாசு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல் நலம் சற்று தேறியவுடன் அவர் வீடு திரும்பினார்.
இது குறித்து அவருக்கு சிகி்ச்சை அளித்த டாக்டர் சுதிர் டகோன்கர் கூறுகையில்,
காய்ச்சல் மற்றும் சோர்வால் அவதிப்பட்ட பிபாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார் என்றார்.
வீடு திரும்பிய பிப்ஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி அறிந்து கவலையாக உள்ளவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் தற்போது நலமாக உள்ளேன். சோர்வு மற்றும் வைரஸ் காய்ச்சல் என்று தெரிவி்த்துள்ளார்.
பிபாஷா நடித்து அண்மையில் ரிலீஸான ராஸ் 3 படத்தின் வெற்றியை அவர் உடல் நலம் தேறிய பிறகு கொண்டாடப்போவதாக தெரிவித்துள்ளார். தனது நடிப்பை பாராட்டிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment