பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் தலைமுறைகள்!

|

Ilayaraaja Compose Balu Mahendra New Movie

7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.

தலைமுறைகள் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பாலு மகேந்திராவின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார்!

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திரா இயக்கத்தில் கடைசியாக வந்த படம் அது ஒரு கனாகாலம். தனுஷ் நடித்திருந்தார். 2005-ல் இந்தப் படம் வந்தது. அதற்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக படங்கள் இயக்காமல், திரைப்பட பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்தப் படம் குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில், "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் "தலைமுறைகள்" என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை.

படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாமென்றிருக்கிறேன். 78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது... 34 இனிய வருடங்கள் ! இனியும் அப்படித்தான்.

இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன். அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜா தான். அதில் மாற்றம் கிடையாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment