பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் அடுத்த படம் ரெடியாகிவிட்டது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெயில், காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி. மற்றும் ஈரம் போன்ற படங்கள் மிக பெரிய வெற்றி பெற்றது. வளரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர். ஆனால் சமீபகாலமாக தனது தயாரிப்பை தள்ளி வைத்த ஷங்கர் தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில், புதுமுக இயக்குனர் ராஜமுருகனிடம் கதை கேட்ட ஷங்கர், உடனே ஓகே என்று சொல்லிவிட்டாராம். ராஜமுருகனின் கதையை கேட்டு, வியந்து போன ஷங்கர், விரைவில் படத்தை தொடங்கலாம் என பச்சைகொடி காட்டிவிட்டாராம். இந்த படத்தில் ஹீரோவாக, ஹீரோயினாக யார் நடிக்க போகிறார்கள் என்பது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
Post a Comment