முருகதாஸின் ""ராஜா ராணி''

|

Murugadoss''s ''Raja Rani''

ஆர்யா நயன்தாரா மற்றும் ஜெய் கூட்டணியில், இயக்குனர் அட்லி இயக்கி, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் படத்திற்கு ராஜா ராணி என்று பெயர் சூட்டி உள்ளனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இப்படத்தினை முருகதாஸூடன் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று உலகநாயகன் கமலஹாசனால் கிரீம் இன் சாலை பங்களாவில் வைத்து துவங்கப்பட்டது. ஆர்யா மற்றும் நயன்தாரா ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜோடியாக நடித்து பெரிய வெற்றி கண்டது. அதனால் இந்த படத்திலும் கண்டிப்பாக அவர்களது கூட்டணி வெற்றியை கொடுக்கும் என்று நினைத்தால், அதற்க்கு மாறாக ஜெய்யும், நயன்தாராவும் இப்படத்தில் ஜோடி சேருகின்றனர். தற்போது ஆர்யா சேட்டை, இரண்டாம் உலகம் மற்றும் விஷ்ணுவர்தனின் தலைப்பில்லா படத்தில் நடித்து கொண்டிருப்பதால், அதனை முடித்து விட்டு ராஜா ராணி ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்கபடுகிறது.
 

Post a Comment