பிரியாணி படத்தில் "ஷ்யாம் ஆண்டர்சன்"

|

Sam Anderson in Biriyani

கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில்  ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக காக்டெய்ல் இந்தி படத்தில் நடித்த தியானா நடிக்க பேச்சு நடக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. வெங்கட் பிரபு படம் என்றால் கெஸ்ட் ரோல் அதிகமாக இருக்கும், அப்படி இந்த படத்திலும் கெஸ்ட் ரோல் உண்டு. யார் அந்த நடிகர் தெரியுமா?.. பவர் ஸ்டாருக்கு இணையான ஷ்யாம் ஆண்டர்சன்.. யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் அதிகம் பார்த்த படங்களில் ஷ்யாம் ஆண்டர்சனின் 'யாருக்கு யாரோ ஸ்டப்னி'. இந்நிலையில் கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்தில் 'ஷ்யாம் ஆண்டர்சன்' நடிக்க வைக்கப் போகிறார். இப்படியாவது வெள்ளித்திரையை 'ஷ்யாம் ஆண்டர்சன்' தொடட்டும்..
 

Post a Comment