'ஒன்பதுல குரு' படத்தில் நடிக்கவில்லை என்று ஸ்ரேயா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, 'இந்த படத்தில் வினய்யுடன் நான் நடிப்பதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது 'சந்திரா' படத்தில் மட்டுமே நடித்துவருகிறேன். மேலும் தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படங்களில் நடித்துவருகிறேன். தமிழில் வேறு படங்களில் ஒப்பந்தமாகவில்லை" என்றார். ஸ்ரேயா நடித்துள்ள 'மிட்நைட் சில்ரன்' என்ற ஆங்கிலப் படத்தின் பிரிமீயர் லண்டனில் நடக்கிறது. இதற்காக அவர் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து லண்டன் சென்றார்.
Post a Comment