சுவாரஸ்யமான வேடிக்கை விளையாட்டு!

|

Makkal Tv Vedikkai Vilayattu

கேம் ஷோ என்றாலே சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் கலந்திருக்க வேண்டும். மக்கள் டிவியில் ஒளிபரப்பாகும் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் குறும்புத்தனங்கள் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறு சிறு வினோத விளையாட்டுகள் இடம் பெற்றன. சென்னைக்கு அருகில் உள்ள கேளிக்கை பூங்காவான கிஷ்கிந்தாவில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு புறமும், நட்பு வட்டாரமாய் சுற்றித்திரிந்த நண்பர்கள் கூட்டம் மறுபுறமுமாய் நிகழ்ச்சி களைகட்டியது. செங்கலின் மேல் கால் தடம் பதித்து சுமார் 100 மீட்டர் வரை பயணிக்கும் போட்டி, நெற்றியில் தண்ணீர் குவளையை வைத்து வானத்தை பார்த்துக் கொண்டே 100 மீட்டர் வரை நடக்கும் போட்டி என இரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. தொகுப்பாளினி அபர்ணா அற்புதமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஆச்சரியமான பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சனிக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இதனை எதிர்கொண்ட முறை, அவர்கள் குறும்புத்தனமாய் செய்த தவறுகள் அனைத்தும் வரும் வார நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

 

Post a Comment