பிரபல இசையமைப்பாளரான குரு கல்யாணின் 'கேர்ள் ஐ லவ் யூ' என்ற மியூசிக் வீடியோ, யூ டியூப் இணையதளத்தில் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது.
'மாத்தியோசி' திரைப்படத்தின் இசையமைப்பாளர் குரு கல்யாண், தனது இரண்டாவது மியூசிக் வீடியோவை யூ டியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 'கேர்ள் ஐ லவ் யூ' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவில், ஒரு கனவு தேவதையை வர்ணிக்கும் வகையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான படப்பிடிப்பு உள்நாட்டிலும், லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோ, இளம் வயதினர் இடையே பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடல்களை எழுதியவர் சுந்தர் சுரேஷ். இந்த மியூசிக் வீடியோவில் லண்டனை சேர்ந்த லீனா தபோனி என்பவர், அமெரிக்கா கனவு தேவதையாக நடித்துள்ளார்.
முன்னதாக குரு கல்யாணின் முதல் மியூசிக் வீடியோ கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. 'கிரேஸி லவ் சாங்' என்று பெயரிடப்பட்ட அந்த மியூசிக் வீடியோ, யூ டியூப் இணையதளத்தில் 40 ஆயிரத்திற்கு அதிகமான ரசிகர்களின் விருப்பத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
'கேர்ள் ஐ லவ் யூ' வீடியோவை யூ டியூப் இணையதளத்தில் காண, http://www.youtube.com/watch?v=vBh9xbfExMA Facebook, twitter, youtube: gurukalyanmusic"
Post a Comment