விஸ்வரூபம் படத்திற்கு யூ/ஏ?

|

Vishwaroopam gets U/A?

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் விஸ்வரூபம் பட ரிலீசை கமல்ஹாசன் தள்ளிப்போனதாக கூறப்பட்ட நிலையில், படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே சமயம் இந்தி பதிப்பிற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை கமலே எழுதி இயக்கியுள்ளார். இப்பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்துவிட்டது. ஜூலை இறுதியில் இப்படம் திரைக்கு வர வேண்டியது தான்.
 

Post a Comment