துப்பாக்கி 2ம் பாகம் வரலாம்: விஜய் சூசகம்

|

Vijay Hints At Sequel Thuppakki
சென்னை: துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் வரக்கூடும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி தீபாவளி அன்று ரிலீசானது. ரிலீசான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது. பல பிரச்சனைகளுக்கு நடுவே துப்பாக்கி வெற்றிகரமாக ஓடுவதால் விஜய், காஜல் உள்பட அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜயிடம் நிஷாவை மணக்காமல் ஜெகதீஷ் தனது கடமையைச் செய்ய கிளம்பிவிட்டது போல் துப்பாக்கி படம் முடிந்துவிட்டதே. அப்படி என்றால் இரண்டாம் பாகம் வரும் போலிருக்கே என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், நானும் இதைத் தான் முருகதாஸிடம் கேட்டேன், அதற்கு அவர் 2ம் பாகம் வரலாம் என்பது போல் சூசகமாகக் கூறினார் என்றார்.
இதற்கிடையே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், விஜயும் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
 

Post a Comment