நாகர்கோவில்: நாகர்கோவிலில் துப்பாக்கி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் மின் தடை ஏற்பட்டதால் ரசிகர்கள் டிக்கெட் பணத்தை திரும்ப கேட்டு ரசிகர்கள் தகராறு செய்தனர்.
சிறிது நேரத்தில் அந்த ஜெனரேட்டரும் பழுதாகிவிட்டது. இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர் வேறு ஒரு ஜெனரேட்டரை வெளியில் இருந்து வரவழைத்து படத்தை இயக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் அரைமணிநேரம் தாமதமானது. அதன்பிறகு ஜெனரேட்டர் வந்ததும் மீண்டும் படம் ஓடத்தொடங்கியது.
ஆனால் திரைப்படம் பார்க்க வந்திருந்த விஜய் ரசிகர்களில் சிலர் தங்களுக்கு நேரம் ஆகிவிட்டது என்று கூறி டிக்கெட்டுக்காக கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கூறி தியேட்டர் நிர்வாகிகளிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனாலும் அந்த ரசிகர்கள் தங்களது பணத்தை திரும்பக்கேட்டு தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்யவே அவர்களுக்கு தியேட்டர் நிர்வாகத்தினர் பணத்தை திரும்ப வழங்கி அனுப்பி வைத்தனர்.