சென்னை: சிங்கம் 2 படத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் பாட்டில் நடிகை அஞ்சலி கவர்ச்சியாக ஆடியுள்ளாராம்.
சிங்கம் பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.
சிங்கம் 2ல் இரண்டு ஹீரோயின்
சிங்கம் படத்தில் சூர்யா, அனுஷ்கா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா என்று 2 நாயகிகள் உள்ளனர்.
நோ சொன்ன நயன், ஸ்ரேயா
சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வருமாறு நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரை ஹரி அணுகினாராம். இது தவிர பாலிவுட், டோலிவுட் பக்கமும் நடிகையைத் தேடிச் சென்றும் பயனில்லை.
சட்டென்று டேட் கொடுத்த அஞ்சலி
அதன் பிறகு அஞ்சலியைக் கேட்டபோது ஓ.கே. சொல்லி டேட் கொடுத்ததுடன் தூத்துக்குடியில் நடந்த ஹீரோ அறிமுக பாடல் காட்சியில் கவர்ச்சியாக ஆடிவிட்டுப் போயுள்ளார். அதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
சிங்கம் 2ம் இந்திக்கு போகுமா?
சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது. அங்கு அஜய் தேவ்கன், காஜல் அகர்வால் நடித்திருந்தனர். இந்நிலையில் சிங்கம் 2ம் பாகமும் இந்தியில் ரீமேக் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
+ comments + 1 comments
i love anjali
Post a Comment