விஸ்வரூபம் படம் தள்ளிப் போனதில் நிஜமாகவே சந்தோஷப்படுபவர் விஷாலாகத்தான் இருக்கும்.
விஸ்வரூபம் படம் கால வரையின்றி தள்ளிப் போனதால், விஷால் - த்ரிஷா நடித்த சமர் படத்துக்கு போதுமான அளவு நல்ல தியேட்டர்கள் கிடைத்துள்ளன.
டி ரமேஷ் தயாரிப்பில், திரு இயக்க, யுவன் சங்கர் ராஜ் இசையில் உருவாகியுள்ள சமர் படம் கடந்த மாதமே ரிலீசுக்குத் தயாரானது.
ஆனால் பணப் பிரச்சினை காரணமாக படம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. பிரச்சினை முடிந்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோது, போதிய தியேட்டர்கள் இல்லாத நிலை.
இந்த சூழலில்தான், விஸ்வரூபம் பொங்கலுக்கு வெளியாகாது, காலவரையறையின்றி தள்ளிப் போகிறது என்ற செய்தி மூன்று தினங்களாக உலாவர ஆரம்பித்தது.
இது சமர் படத்துக்கு பேருதவியாக அமைந்தது. பிரச்சினை சுமூகமாக முடிந்தால் விஸ்வரூபத்தை வெளியிடலாம் என்று காத்திருந்த பெருமளவு அரங்குகளில் ஜனவரி 13-ம் தேதி சமர்தான் வெளியாகவிருக்கிறது.
Post a Comment