கோஹ்லியுடன் நேரத்தை செலவிடுகிறேன், ஆனால் காதல் இல்லை- நடிகை சஞ்சனா

|

Sanjana Denies Links With Kohli

மும்பை: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்கும் எனக்கும் இடையே நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நடிகை சஞ்சனா தெரிவித்துள்ளார்.

நடிகை சஞ்சனாவை ஞாபகம் இருக்கிறதா. காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவருக்கு அதை அடுத்து வாய்ப்புகளே இல்லை. இதனால் அவர் பேக்கப் செய்து கொண்டு கன்னடம், தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு சென்றுவிட்டார். அதிலும் குறிப்பாக கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இளம் கிரிக்கெட் வீரரான விராத் கோஹ்லி எப்பொழுதெல்லாம் பெங்களூர் வருகிறாரோ அப்போதெல்லாம் சஞ்சனாவுடன் ஊர் சுற்றுவதாக செய்திகள் வெளியாகின. ஒரு வேலை அவர்களுக்குள் காதலாக இருக்குமோ என்ற பேச்சு அடிபட்டது.

இது குறித்து சஞ்சனாவிடம் கேட்டதற்கு,

ஆமாம், நான் கோஹ்லியுடன் நேரத்தை செலிவிடுகிறேன். ஆனால் எங்களுக்குள் நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றார்.

 

Post a Comment