மும்பை: மரணம், வருமானத்துறையிடம் இருந்து மனிதர்கள் ஒருபோதும் தப்ப முடியாது. இவை இரண்டும் மிக முக்கியமானவை என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
2001-2002 ம் ஆண்டில் 'கோன் பனேகா குரோர்பதி' என்னும் டி.வி. நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வரிமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில், உச்ச நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற 'ஜாலி எல்எல்பி' படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்தார்.
இந்திய நீதித்துறை முறைகளை கிண்டல் செய்வது போன்று இப்படம் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை பற்றி கூறிய அமிதாப், இந்த படத்தில் தான் மிகவும் விரும்பி நடித்ததாகவும், இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'ஜாலி எல்எல்பி' படத்தில் அமிதாப் தலைமை நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ் பற்றி அமிதாப் பச்சனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்," மனிதர்களின் வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரித்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன்" என்றும் அமிதாப் கூறினார்.
Post a Comment