முதலில் தியேட்டர்களில்தான் விஸ்வரூபம் வெளியாகும்.. தேதி முடிவாகவில்லை! - அபிராமி ராமநாதன்

|

Visawaroopam Will Release Only Theaters

சென்னை: விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் மட்டுமே முதலில் வெளியாகும்... டிடிஎச்சில் அல்ல. வெளியாகும் தேதி குறித்து இன்று அறிவிப்போம் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

விஸ்வரூபம் பட வெளியீடு தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் - கமல்ஹாசன் இடையே கடந்த மூன்று நாட்களாக தொடர் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நேற்று பகல் 7 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தயாரிப்பாளர் கேயார், திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலர் பன்னீர் செல்வம், திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கமலுடன் பேசினர்.

முடிவில் டிடிஎச்சில் நாளை படத்தை வெளியிடும் முடிவை கமல் ரத்து செய்ய ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், "இரு தரப்பினரும் சந்தித்து பேசினோம். மீண்டும் சந்தித்துப்பேச இருக்கிறோம்," என்றார்.

அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூறும்போது, "முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விஸ்வரூபம் படம் தியேட்டர்களில்தான் முதலில் ரிலீஸ் செய்யப்படும். டிடிஎச்சில் அல்ல. ரிலீஸ் தேதி பற்றி, அடுத்த சுற்றுப் பேச்சுக்குப் பிறகு சொல்கிறோம்," என்றனர்.

ஜனவரி 25-ம் தேதி தியேட்டர்களிலும் அடுத்த நாள் டிடிஎச்சிலும் வெளியிடலாமா என ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

 

Post a Comment