'நயன்தாராவை பார்க்கத்தான் முடிஞ்சது.. ஆடியதெல்லாம் தனுஷ்தான்!' - சிவகார்த்திகேயன்

|

Sivakarthikeyan S Wish Shake Leg With Nayan

எதிர்நீச்சல் படத்தில் நயன்தாராவுடன் ஆட ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

3 படத்துக்குப் பிறகு தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் எதிர்நீச்சல். இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். ப்ரியா ஆனந்த் ஹீரோயின்.

இந்தப் படத்தில் நயன்தாராவும் தனுஷும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம், 'உங்கள் படத்தில் நயன்தாரா ஆடியிருக்காங்க... ஆனா நீங்க அவங்க கூட ஆடலியே?' என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில்:

இந்தப் பாட்டுக்கு தனுஷும் நயன்தாராவும் ஆடியுள்ளனர். அப்படியொரு ஆட்டம். எனக்கும் நயன்தாரா கூட ஆட ஆசையாத்தான் இருந்தது. ஆனால் அவரை அருகிலிருந்து பார்க்கத்தான் முடிந்தது. ஆட்டத்தையெல்லாம் தயாரிப்பாளர் தனுஷே பார்த்துக் கொண்டார்," என்றார்!

ஆனால் அடுத்து வரும் படங்களில் தன் ஆசை தீர்ந்துவிடும் என நம்புகிறாராம்!

 

Post a Comment