தர்மபுரியில் நடந்த சாதிக் கலவரத்தை மையப்படுத்தி கௌரவம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ராதா மோகன்.
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சிரிஷ், யாமி குப்தா நடிக்கும் படம் கௌரவம். ராதா மோகன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதை, தர்மபுரியில் சமீபத்தில் நடந்த கலப்பு திருமண மோதலை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தப் படத்துக்கு கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை என்ற சாதிக் கட்சியின் தலைவரான பொங்கலூர் ரா.மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கலப்பு திருமணத்துக்கு எதிராக கௌரவ கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்றும் சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும் வன்முறைகளை தூண்டிவிடும் வகையிலும் காட்சிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், "கௌரவம் படத்தை தர்மபுரி கலவரத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருப்பதாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தப் படத்தை ரிலீசுக்கு முன்பே காட்டத் தயார்," என்றார்.
Post a Comment