மதுரை: செக் மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நேற்று மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராகி சரணடைந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர், கடந்த 2011ம் ஆண்டு தன்னிடம் பவர் ஸ்டார் சீனிவாசன், சொந்த தேவைக்காக 9 லட்ச ரூபாய் கடனாக பெற்றார். அதனை இரண்டு மாதங்களுக்குள் திருப்பி கொடுத்துவிடுவதாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி தரவில்லை.
கடந்த 03.01.2012 அன்று சீனிவாசன் தனது வங்கி காசோலையை கொடுத்தார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லை என்று திரும்பியது. இதையடுத்து சீனிவாசனை பலமுறை நேரில் கேட்டுபார்த்தேன். அவர் பணம் கொடுக்காததால், சீனிவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மதுரை 2வது மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு விசாரணையில் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து கடந்த 25ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தார் மாஜிஸ்திரேட். இதையடுத்து நேற்று சீனிவாசன் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது அவர், என்னிடம் வேலை பார்த்த கணேஷ் குமார், என்னுடைய ஏடிஎம் கார்டையும், என்னுடைய வங்கி காசோலையையும் திருடிக்கொண்டு சென்றுவிட்டார் என்று மாஜிஸ்திரேட்டிடம் கூறினார்.
இதனை வழக்கறிஞர் மூலம் மனுவாக கொடுக்குமாறு சொன்ன மாஜிஸ்ரேட், வழக்கு விசாரணையை தள்ளி வைத்ததோடு, 25ம் தேதி நடைபெறும் மறுவிசாரணையில் ஆஜராகுமாறும் பவருக்கு உத்தரவிட்டார்.
பவர் ஸ்டார் கோர்ட்டுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக் கண்டு களிக்க பெரும் கூட்டம் கூடி விட்டது. இதனால் கோர்ட் வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
Post a Comment