மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துல்க்வார் சல்மான் - ஆலியா பட் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் புதிதாக ஒரு தெலுங்குப் படத்தை இயக்கவிருந்தார். அதில் நாகார்ஜூனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவிருந்தது.
ஆனால் அந்தப் படம் திடீரென கிடப்பில் போடப்பட்டது. அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என மகேஷ் பாபுவும் கூறிவிட்டார்.
இந்த நிலையில் வேறு கதையைப் படமாக்கப் போகிறாராம் மணிரத்னம். இது இளம் காதலர்களைப் பற்றிய கதையாம்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்க்வார் சல்மான் (வாயை மூடிப் பேசவும் ஹீரோ). பிரபல நடிகர் மம்முட்டியின் மகன். இவரை நாயகனாவும், பிரபல இந்தி நடிகை ஆலியா பட்டை நாயகியாகவும் ஒப்பந்தம் செய்துள்ளாராம் மணிரத்னம்.
இதுகுறித்து துல்க்வார் சல்மானிடம் கேட்டபோது, 'இந்தப் படம் பற்றிய எந்தத் தகவலாக இருந்தாலும் அதை இயக்குநர் மணிரத்னம்தான் சொல்ல வேண்டும். இப்போது எதுவும் சொல்ல முடியாது," என்றார்.
Post a Comment