பார்த்துமா, காத்தடிச்சா பறந்துடப் போற: நடிகையை கேலி செய்யும் ஹீரோக்கள்

|

சென்னை: காவியமான லீடர் படத்தில் நடிக்கும் ஹீரோயினின் உடல் வாகை பார்த்து ஹீரோக்கள் கிண்டலடிக்கிறார்களாம்.

மில்க் இயக்குனரின் சமீபத்திய படத்தில் நடித்தவர் அந்த ஒல்லிக்குச்சி நாயகி. சிவப்பழகியான அவரை படத்தில் கருப்பாக காட்டியிருந்தனர். அவர் தற்போது காவியமான லீடர் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை நடிக்க வந்ததில் இருந்து ஒல்லிக்குச்சியாகவே உள்ளார். அதனால் அவரை பார்க்கும் ஹீரோக்கள் என்னமா இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள், காற்றடித்தால் பறந்துவிடப் போகிறீர்கள், பார்த்து போங்க என்று கிண்டல் செய்கிறார்களாம்.

வேகமாக காற்று வீசினால் ஒடிந்து கிடிந்து போய் விடப் போகிறீர்கள் என்றும் ஹீரோக்கள் கூறுகிறார்களாம். இதை எல்லாம் கேட்டு அந்த நடிகை கோபப்படவில்லையாம். நான் இப்படி இருப்பதால் தான் எனக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருகிறது என்று கூலாக தெரிவித்துள்ளாராம்.

 

Post a Comment