காமெடியில், 'நண்பேன்டா' மற்றுமொரு 'ஓகே ஓகே': உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ஜெகதீஷ் இயக்கத்தில், உதய நிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் திரைப்படம், நண்பேன்டா. சந்தானம், நயன்தாரா போன்ற முன்னணி ஸ்டார்களும் படத்தில் உண்டு.

இந்நிலையில், செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு, உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: மூன்று குழந்தை பருவ நண்பர்கள், சண்டைபோட்டு, பிரிந்து மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைவதுதான், நண்பேன்டா படத்திந், ஒன்லைன் ஸ்டோரி.

காமெடியில், 'நண்பேன்டா' மற்றுமொரு 'ஓகே ஓகே': உதயநிதி ஸ்டாலின்

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நானும், சந்தானமும் இணைந்து வந்த காட்சிகளுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதேபோல, நண்பேண்டா படத்திலும், ரசிகர்களை மகிழ்விக்க தேவையான அனைத்து விஷயங்களும் உள்ளன. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இரண்டாம் பாகம் போல நண்பேன்டா இருக்க போகிறது.

ஆதவன் படத் தயாரிப்பு முதலே, நடிகை நயன்தாரா எனக்கு பழக்கம். நண்பேன்டா படத்தின் கதையை கேட்டதும், தனது கேரக்டருடன் ஒத்துப்போக கூடிய ஹீரோயின் கதாப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளதாக கூறி மகிழ்ந்த நயன்தாரா, இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். அவருடன் இணைந்து நடித்தது ஜாலியான அனுபவமாக இருந்தது.

ஒரு கல் ஒரு கண்ணாடியில், என்னைவிட, சந்தானத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாக நண்பேன்டா இயக்குநர் கருதினார். எனவே, இப்படத்தில், இருவருக்கும் சரிசமமான கேரக்டர்கள் தரப்பட்டுள்ளன. நான் பொதுவாக ஆக்ஷன் செய்ய விரும்புவதில்லை. காமெடியோடு நிறுத்திக்கொள்ள விரும்புவேன். ஆனால் ரசிகர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, நண்பேன்டா படத்தில் சிறு ஆக்ஷன் காட்சியை வைத்துள்ளோம்.

லண்டன், பாலி, அயர்லாந்து ஆகிய பகுதிகளில், 3 பாடல்களை ஷூட் செய்துள்ளோம். பாடல்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக வரும். இவ்வாறு உதய நிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி, அடுத்ததாக 'கெத்து' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக 'இதயம் முரளி' என்ற படத்திலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

யாருமே கண்டுகொள்ளவில்லை: இறங்கி வந்த மனிஷா யாதவ்

சென்னை: பட வாய்ப்புகள் இல்லாததால் மனிஷா யாதவ் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதித்துள்ளார்.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த மனிஷா யாதவ் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஆந்திரா பக்கம் சென்றவர் அங்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

மவுசு இல்லை: இறங்கி வந்த மனிஷா யாதவ்

ஆந்திரா சென்ற வேகத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பியவர் இரண்டு படங்களில் நடித்தார். அதன் பிறகு பாவம் மனிஷாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. விளைவு அவர் கையில் படங்கள் இல்லை. இப்படி சென்றால் என்ன செய்வது என்று யோசித்தார் மனிஷா.

சரி, மார்க்கெட் நன்றாக ஆகும் வரை இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு வந்தாலும் கூட நடிக்க வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தார். அந்நேரம் பார்த்து அவரை இரண்டாவது நாயகியாக நடிக்குமாறு கேட்டு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தயாரிப்பாளர்கள் வந்தனர்.

தேடி வந்த வாய்ப்பை கைநழுவவிட விரும்பாத அவர் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதையடுத்து தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். சும்மா இருந்தால் அனைவரும் மறந்துவிடக்கூடும் என்பதால் வரும் வாய்ப்புகளை ஏற்கிறார் மனிஷா.

 

லிங்கா விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும்! - வேந்தர் மூவீஸ் மதன்

சென்னை: லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று வேந்தர் மூவீஸ் மதன் எச்சரித்துள்ளார்.

ரஜினியின் லிங்கா படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் விநியோகித்தவர் வேந்தர் மூவீஸ் மதன்.

லிங்கா விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும்! - வேந்தர் மூவீஸ் மதன்

இந்தப் படத்தை அவரிடமிருந்து வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் படத்துக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள், போராட்டங்களின்போது, எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தார். இப்போதுதான் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:

வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈராஸ் நிறுவனத்திடமிருந்து ‘லிங்கா' திரைப்படத்தை ரூ.67 கோடிக்கு வாங்கினேன். உடனே இப்படத்தை விநியோகஸ்தர்கள் அனைவரும் பலத்த சிபாரிசுகளுடன் வந்து எங்களை வற்புறுத்தி என்ஆர்ஐ என்ற முறையில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். அவ்வாறு வாங்கியதில் கோவை, சேலம் தவிர மற்ற விநியோகஸ்தர்கள் ரூபாய் 3 கோடியே 30 லட்சம் தராமல் ஏமாற்றி விட்டார்கள். நான் அதையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் படத்தை வெளியிட அனுமதி கொடுத்தேன்.

ஆனால் இவர்கள் படம் வெளியான ஐந்தாவது நாளே படத்தை பற்றி மிக மோசமாக, ரஜினி சாரை பற்றி இழிவாக ஊடகங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனால் படத்தின் வசூல் பலமாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக செய்திகளின் தாக்கம் சென்னையில் அதிகமாக இருப்பதால் நான் நேரடியாக வெளியிட்ட சென்னை நகர வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அதில் மட்டும் என்று நாலே கால் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

விநியோகஸ்தர்களின் தரக்குறைவான நடவடிக்கைகளையும் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி பலமுறை நான் சொல்லியும் கேட்கவில்லை. நான்கு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள் நானே ரஜினிகாந்த் அவர்களிடம் பேசி தகுந்த இழப்பீட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். அதையும் அவர்கள் கேட்கவில்லை.

மாறாக உண்ணாவிரத போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், கீழ்தரமான அறிக்கைகள் என்று தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை நான் சொல்வதை கேட்டு ஒழுங்காக நடந்திருந்தால் ரஜினி அவர்கள் இன்னும் பெரிய அளவில் உதவி செய்திருப்பார்கள். ஆனால் இவர்களையெல்லாம் மன்னித்து பெரிய மனதோடும் அன்போடும் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களுடன் இணைந்து ஒரு பெரிய தொகையை வழங்கியுள்ளார்கள்.

இதை ரஜினி சார் அவர்களின் அழைப்பின் பெயரில் கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தமிழ் திரைப்பட சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, விநியோகஸ்தர்-தயாரிப்பாளர் அன்பு செழியன் ஆகியோர் மேற்படி பணத்தை சரியான முறையில் பிரித்து கொடுக்க முன்வந்தனர்.

அதற்காக ஒரு சரியான தீர்வையும் கொடுத்தனர். ஆனால் விநியோகஸ்தர்களில் நான்கு பேர் மட்டும் அவர்களை மதிக்காமல் எங்கள் நான்கு பேருக்கும் இவ்வளவு வேண்டும் என்றும் யார் யாருக்கு எவ்வளவு வேண்டுமென்றும் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் வழக்கமான ப்ளாக்மெயில் வேலையை தொடங்கிவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக ‘லிங்கா' படத்தை திட்டி, ரஜினி சாரை திட்டி, ராக்லைன் வெங்கேடஷ் அவர்களைத் திட்டி, வேந்தர் மூவிஸை திட்டி அறிக்கை விட்டவர்கள் தற்போது ரஜினி சாரின் அழைப்பின் பேரில் செட்டில்மெண்டில் கலந்துகொண்டுள்ள கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் மூத்த விநியோகஸ்தருமான சுப்ரமணியம் அவர்களைத் திட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் இந்த பணியை அவரை செய்யுமாறு கேட்டுக் கொண்டது ரஜினிகாந்த் அவர்களும், ராக்லைன் வெங்கேடஷ் அவர்களும்தான். மேலும் இந்த இழப்பீட்டு தொகையையும் ராக்லைன் வெங்கேடஷ் அவர்கள் திருப்பூர் சுப்ரமணியம் அவர்களிடம்தான் கொடுத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிமேல் இதுபோல் அறிக்கை வெளியிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். இதுவரை பரபரப்பாக அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்த சிங்காரவேலன் இப்போது மௌனமாக இருப்பது ஏன்? மற்ற விநியோகஸ்தர்களுக்கு துரோகம் செய்துவிட்டு அவர் மட்டும் தனியாக ஏதும் வாங்கிக் கொண்டாரா அப்படி என்றால் வாங்கிய பணம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தராமல் எங்கே போனது? இதுமட்டும் போதாது என்று போராட்டம் நடத்திய செலவுகளையும் வழக்கு நடத்திய செலவுகளையும் எனக்கு தனியாக கொடுத்தாக வேண்டுமென்று மிரட்டி வருகிறார் சிங்காரவேலன்.

இந்த மோசடி விநியோகஸ்தர்கள் மீதும் எனக்கு ஒப்பந்தப்படி பணம் தராமல் ஏமாற்றிய விநியோகஸ்தர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ரஜினிகாந்த் தரும் பணத்தை சரியான அளவில் எல்லோருக்கும் ஒரே அளவு சதவிகிதத்தில் பிரித்துத் தரவேண்டும்.

அதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து ஒரு கமிட்டியை உருவாக்கி இதை சுமூகமாகவும், நியாயமாகவும் முடித்து கொடுக்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் தியேட்டர் டெபாசிட் முழுமையாக திருப்பி கொடுக்கப்பட வேண்டும்.

அதற்கு அந்தந்த ஏரியா விநியோகஸ்தர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். கீழ்த்தரமான அறிக்கைகள் தருவதை நிறுத்திவிட்டு ப்ளாக்மெயில் செய்யும் கலாச்சாரத்தை அடியோடு கைவிட்டு விட்டு நியாயமான பாதைக்கு வரவேண்டுமென விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கொம்பன் படம் பார்க்க லேட்டாக வந்த கிருஷ்ணசாமி.. கோபத்தில் கிளம்பிப் போன நீதிபதிகள்!

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி கொம்பன் படத்தைப் பார்த்து கருத்து சொல்ல வந்த நீதிபதிகளைப் படம் பார்க்க விடாமல் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆட்கள் தொந்தரவு செய்ததால் படத்தைப் பார்க்காமலேயே நீதிபதிகள் கோபமாகக் கிளம்பிவிட்டனர்.

இப்போது மாலையில் மீண்டும் அவர்களுக்கு படம் திரையிடப்படுகிறது. அவர்களுடன் கிருஷ்ணசாமியும் படம் பார்க்கிறார்.

கொம்பன் படம் பார்க்க லேட்டாக வந்த கிருஷ்ணசாமி.. கோபத்தில் கிளம்பிப் போன நீதிபதிகள்!

கொம்பன் படம் சாதி மோதல்களைத் தூண்டும் விதத்தில் உள்ளதாகக் கூறி அப்படத்துக்கு தடை கோரி வருகிறார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி. அவருக்கு சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் படத்துக்கு தடை கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தை கிருஷ்ணசாமி, இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு பார்த்து கருத்து தெரிவித்த பிறகே தீர்ப்பளிப்பதாகக் கூறிவிட்டார்.

அதைத் தொடர்ந்து மதுரையிலிருந்து இரு நீதிபதிகள் விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தனர்.

நுங்கம்பாக்கம் ஃபோர் பிரேம்ஸ் அரங்கில் படம் 7 மணிக்கே திரையிடப்பட்டது. அப்போது கிருஷ்ணசாமி வரவில்லை. ஒரு மணிநேரம் கழித்துதான் வந்தாராம்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு மணி நேரம் தாமதமாக வந்த கிருஷ்ணசாமி, மீண்டும் முதலிலிருந்துதான் படம் பார்ப்பேன் என அடம் பிடித்தார். அதுமட்டுமல்ல, இந்தக் காட்சி என்ன.. அதன் ஸ்கிரிப்டைக் கொடுங்கள் என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் படம் பார்க்க வந்த நீதிபதிகள் கோபமடைந்து படம் பார்க்காமலேயே சென்றனர்," என்றார்.

இந்த நிலையில் மீண்டும் இன்று மாலை நீதிபதிகள் படம் பார்க்கப் போவதாகவும், அவர்களுடன் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் படம் பார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 

நாளையே வெளியாகிறது கொம்பன் - தயாரிப்பாளர் அறிவிப்பு

பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள கொம்பன் படத்தை ஒரு நாள் முன்பாக, நாளையே வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.

கொம்பன் படத்துக்கு சாதிய பின்னணியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் நாடார் அமைப்புகளும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாளையே வெளியாகிறது கொம்பன் - தயாரிப்பாளர் அறிவிப்பு

இந்தப் படத்துக்கு எதிரான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை பிலிம்சேம்பரில் சந்தித்த ஞானவேல்ராஜா, படத்தை அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக, நாளை (புதன் கிழமை) வெளியிடவிருக்கிறோம்," என்றார்.

இதன் மூலம் கொம்பன் படம் எதிர்ப்புகளை மீறி வெளியாவது உறுதியாகிவிட்டது.

 

ஐ சப்போர்ட் கொம்பன்! - ட்விட்டரில் தனுஷ்

கொம்பன் படத்துக்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

கார்த்தி - லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படத்தை, குட்டிப் புலி படம் இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.

ஐ சப்போர்ட் கொம்பன்! - ட்விட்டரில் தனுஷ்

ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், சாதி மோதல்களைத் தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி.

அவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டதத்தில் குதித்துள்ள நிலையில், படத்துக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் படத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்.

பல நடிகர் நடிகைகளும் படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருது பெற்ற நடிகர் - தயாரிப்பாளர் தனுஷ், படத்தை ஆதரிப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஐ சப்போர்ட் கொம்பன் என்று அவர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

 

சவாலே சமாளி... இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான இசை.. போலீசில் புகார்!

சென்னை: சவாலே சமாளி' திரைப்பட பாடல்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கவிதா பாண்டியன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தார்.

அந்த மனுவில், "எங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'சவாலே சமாளி' என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறோம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்குகிறார், தமன் இசையமைத்துள்ளார்.

நடிகர் நாசர், அசோக் செல்வன், ஜெகன், நடிகை பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சவாலே சமாளி... இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான இசை.. போலீசில் புகார்!

இந்தத் திரைப்படத்தின் பாடல்களை வெளியிடுவற்குரிய உரிமத்தை, ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளோம்.

இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் பாடல்களை சில மர்ம நபர்கள், திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் எங்களது நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

சென்னை: கொம்பன் படத்தில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை. இது முழுமையான குடும்பப் படம், வெளியாக உதவுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, நாடார் அமைப்புகள் போன்றவை போராட்டத்தில் இறங்கியுள்ளன. படம் வெளியாகுமா இல்லையா என்பது குறித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிடும்.

கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியான காட்சியமைப்போ, வசனங்களோ இல்லை என்று மறுத்திருக்கிறார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 2 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் 'கொம்பன்' திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.

கொம்பனில் எந்த சாதியையும் இழிவுபடுத்தவில்லை! - ஞானவேல் ராஜா

இதில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

யூகத்தின் அடிப்படையில் 'கொம்பன்' திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

'கொம்பன்' திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்,'' என ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

'கொம்பன்' திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி கொடுத்த பணத்தைப் பிரிப்பதில் கட்டப் பஞ்சாயத்து - முட்டல் மோதல்!

லிங்காவுக்காக ரஜினி கொடுத்த பணத்தை பிரிப்பதில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதன் விநியோகஸ்தர்களில் ஒரு குழுவினர்.

இதுகுறித்து லிங்கா' படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் மன்னன், வட, தென் ஆற்காடு விநியோகஸ்தர் கிருஷ்ணமூர்த்தி, நெல்லை விநியோகஸ்தர் ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

லிங்கா படத்தினை வெளியிட்ட வகையில் செங்கல்பட்டு ஏரியாவுக்கு ஏழரை கோடி ரூபாயும், ஆற்காடு ஏரியாவுக்கு நான்கு கோடி ரூபாயும், நெல்லை ஏரியாவுக்கு இரண்டரை கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் அறிவுறுத்தல் பேரில் பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் 12.5 கோடி ரூபாயை நஷ்டஈடாக தர ஒப்புக் கொண்டார்.

ரஜினி கொடுத்த பணத்தைப் பிரிப்பதில் கட்டப் பஞ்சாயத்து - முட்டல் மோதல்!

நஷ்டம் என்று கூறி நிவாரணம் பெற்று தர சங்கங்களை அணுகியபோது யாரும் ஆதரவு தரவில்லை. தற்போது ரஜினிகாந்த் பணம் தருகிறார் என்றதும் பங்கு போட்டு தருவதாக கூறி சங்கங்கள் மூக்கை நுழைப்பதன் மர்மம் புரியவில்லை.

இந்த படத்தை வெளியிட்ட வகையில் நஷ்டம் அடைந்திருப்பது விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மட்டுமே. அவர்களை கலந்து பேசாமல் திருப்பூர் சுப்பிரமணி தான் தோன்றித்தனமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

ரஜினி நடித்த பல படங்களை திரையிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தவர் திருப்பூர் சுப்பிரமணி. பாபா படத்தில் இழப்பு என்றதும் அசலுடன் லாபமும் கேட்டு பெற்றார். ஆனால் லிங்கா விஷயத்தில் விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஏற்க வேண்டும் என்று சொல்வது முரண்பாடாக உள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு அநீதி இழைப்பதை இவர் நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். ராக்லைன் வெங்கடேஷ் பணத்தை ஏரியா வாரியாக பிரித்து கொடுத்தால்தான் பிரச்சினை முடியும். மாறாக கட்ட பஞ்சாயத்து நடந்தால் போராட்டங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விஷால், ஆர்யா, விஷ்ணு... எல்லாம் 'நண்பன்' விக்ராந்துக்காக!

விஜய்யின் 'ஒண்ணுவிட்ட' தம்பியாக தமிழில் அறிமுகமான விக்ராந்த்துக்கு, விஜய்க்கு அமைந்தது மாதிரி படங்களும் கேரியரும் அமையவில்லை.

ஆனால் நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். விஷால்-ஆர்யா-விஷ்ணு இம்மூவரும் விக்ராந்துக்கு சினிமாவில் ஒரு திருப்பம் அமைய வேண்டும் என விரும்புபவர்கள். அதற்கான வாய்ப்பையும் உருவாக்கி வருகிறார்கள்.

விஷால் தயாரித்து, நடித்திருந்த பாண்டிய நாடு படத்தில் விக்ராந்துக்கு சிறிய, ஆனால் மிக நல்ல வேடம் கொடுத்து உயர்த்தியவர் விஷால்.

விஷால், ஆர்யா, விஷ்ணு... எல்லாம் 'நண்பன்' விக்ராந்துக்காக!

இப்போது விக்ராந்த் நாயகனாக நடித்து வரும் படம் பிறவி. இந்தப் படத்தில் ஒரு பாடலில் நண்பன் விக்ராந்துக்காக விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் இணைந்து ஆடியுள்ளனர்.

விஷால், ஆர்யா, விஷ்ணு... எல்லாம் 'நண்பன்' விக்ராந்துக்காக!

சமீபத்தில் இந்தப் பாடலை சென்னையில் உள்ள பின்னி மில்லில் படமாக்கினர்.

சஞ்சீவ் இயக்கி வரும் இந்தப் படம் விக்ராந்த் எதிர்ப்பார்க்கும் திருப்பத்தைத் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இந்த நண்பர்கள். நல்லது!

 

கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் தமன்னா... அப்போ 'தடை' நீங்கிருச்சா?

ஒரு நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தன் படங்களாகவே இருந்த கோடம்பாக்கத்திலிருந்து திடீரென்று காணாமல் போனார் தமன்னா.

அதாவது கார்த்தியுடன் சிறுத்தை படம் நடித்த பிறகு நான்கு ஆண்டுகள் தமன்னா தமிழில் நடிக்கவே இல்லை.

கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் தமன்னா... அப்போ 'தடை' நீங்கிருச்சா?

பையா, சிறுத்தை படங்களில் நடித்தபோது கார்த்தியுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் இதற்கெல்லாம் காரணம் என சிலர் செய்திகள் வெளியிட்டனர். கார்த்தியுடன் நடிக்கக் கூடாது என தமன்னா மிரட்டப்பட்டதாகக் கூட கிசுகிசுத்தனர்.

கார்த்தியும் திருமணம், குடும்பம் என செட்டிலாகிவிட்டார். தெலுங்குப் பக்கமே இருந்த தமன்னாவும் மெல்ல வீரம் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

[தமன்னா படங்கள்]

இப்போது 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேருகிறார் தமன்னா.

பிவிபி சினிமா நிறுவனம் தமிழ் - தெலுங்கில் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்திலிருந்து ஸ்ருதிஹாஸன் விலகிக் கொண்டார் அல்லவா.. அந்த வாய்ப்புதான் தமன்னாவுக்குப் போயிருக்கிறது. ஆக 'தடை' நீங்கிவிட்டது. வெற்றிப் பட ஜோடி மீண்டும் சேர்ந்திருக்கிறது. சுபம்!

 

எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...

இப்போதெல்லாம் இயக்குநர் பேரரசுவை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது. அவரும் குண்டக்க மண்டக்க பேசி வைக்கிறார்.

சமயத்தில் அவர் பேச்சு ரசிக்கும்படியும் அமைந்துவிடும்.

எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...

சமீபத்தில் கைபேசி காதல் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ்' சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படம் இது.

இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. திம்மம்பள்ளி சந்திரா என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

விழாவில் பேசிய பேரரசு, தான் சொந்த ஊரிலிருந்து 20 கி.மீ. சைக்கிளில் சென்று முரட்டுக்காளை படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார்.

எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்டவர், "திறமை உள்ளவர்களுக்கு கர்வம். தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப் பெண்ணின் வயிறைப் போல மரியாதை தரக் கூடியது.

திறமையில்லாதவர்களின் தலைக்கனம் என்பது தொப்பை பெண்ணின் வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா?

திறமையும் இருந்து கர்வமும் இல்லாதவர்கள் இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும் ரசிக்கத் தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன். என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்த போது அங்கு வந்து என்னைப் பாராட்டினார். பாராட்டுபவர்களைச் தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்," என்றார்.

 

கமலின் உத்தம வில்லன் இப்போ ரிலீஸ் இல்லை... தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

சென்னை: மறு தேதி குறிப்பிடப்படாமல் கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தினர்.

முன்னதாக ஏப்ரல் 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜாகுமார்,ஆண்ட்ரியா, ஊர்வசி, பார்வதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'.

கமலின் உத்தம வில்லன் இப்போ ரிலீஸ் இல்லை... தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஈராஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இசை வெளியீடு, இறுதிகட்டப் பணிகள் என அனைத்தும் முடிந்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது சென்சார் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தில், ஏப்ரல் 10ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என தெரிகிறது.

'உத்தம வில்லன்' படத்தை அமெரிக்காவில் வெளியிடும் ப்ரைம் மீடியா நிறுவனத்தினர் "உத்தம வில்லன் 10ம் தேதி வெளியாகவில்லை. வெளியீட்டு தேதி சென்சார் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும்" என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏப்ரல் இறுதியில் படம் வெளியாகலாம் என்கிறார்கள்.

இந்தப் படம் முதலில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகும் என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

 

கண்டுக்கினியா... 'டங்காமாரி'ன்னா இத்தான் அர்த்தமாம்!

சமீபத்தில் வெளியான பாடல்கள் படு சூப்பர் ஹிட்டானது அனேகன் படத்தில் இடம்பெற்ற 'டங்காமாரி ஊதாரி புட்டுக்கின நீ நாறி'...

மத்திய, வட சென்னைவாசிகளுக்கு டங்காமாரி பழக்கமான வார்த்தை. ஆனால் மற்றவர்கள் ஏதோ அதை கேவலமான வார்த்தைகளின் தொகுப்பாகப் பார்த்தார்கள். முகம் சுளிக்கவும் செய்தார்கள்.

கண்டுக்கினியா... 'டங்காமாரி'ன்னா இத்தான் அர்த்தமாம்!

ஆனால் டங்காமாரி என்பது கெட்ட வார்த்தை அல்ல. நல்ல வார்த்தைதான். அடங்காமாரி என்பதுதான் சற்று மருவி டங்காமாரியாக வந்துவிட்டது என்கிறார் கவிஞர் மகுடேஸ்வரன்.

இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதைப் படியுங்கள்:

டங்காமாரி, ஊதாரி' என்று ஒரு பாட்டு தொடங்குகிறது. ஊதாரிக்குப் பொருள் தெரியும். அதென்ன டங்காமாரி ? அடங்காமாரி, அடங்காப்பிடாரி' போன்ற வசவுச் சொற்களைப் பற்பல பகுதிகளில் கேட்கலாம். ‘அடங்காமாரி' என்பதன் சென்னை வழக்குத்தான் ‘டங்காமாரி'. அடங்காமாரியை விரைந்து நாவழுக்கும்படி சொன்னால் ‘டங்காமாரி' என்ற ஒலிப்பை அடையும்.

'அடங்காமாரி நாயி...' என்று வைவார்கள். அடங்காதவன், திமிர் பிடித்தவன், தான்தோன்றி என்பன பொருள்கள். மார்' என்பது பலர்பால் விகுதிகளில் ஒன்று. மாமன்மார், அத்தைமார் என்போம். பெரியோர்களே, தாய்மார்களே...' என்பது வழக்கமான மேடைவிளிப்பு. மார் என்னும் விகுதியின் திரிபே மாரி. அதனால், ‘அடங்காமாரி'தான் டங்காமாரி !

-எப்பூடி!

 

ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை... கனடாவில் பிறந்தது

பிரபல நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை கனடாவில் பிறந்துள்ளது.

தொன்னூறுகளில், தொடையழகி என்ற பட்டத்தோடு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரம்பா.

ரஜினி, கமல் என முதல் நிலை நாயகர்களுடன் நடித்தார். பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை... கனடாவில் பிறந்தது

கடந்த 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார்.

இவர்களுக்கு 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என்று பெயரிட்டனர்.

இதையடுத்து, ரம்பா மீண்டும் கர்ப்பமானார். இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கனடாவில் வைத்து பிரசவம் நடந்தது.

 

'கொம்பன்' படத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு... திருச்சியில் புதிய தமிழகம் இன்று ஆர்ப்பாட்டம்

கார்த்திக் நடித்த 'கொம்பன்' படத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு... திருச்சியில் புதிய தமிழகம் இன்று ஆர்ப்பாட்டம்  

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணசாமிக்கு சென்னையில் பிரிவியூ ஷோ காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்த பின் கிருஷ்ணசாமி படம் வெளி வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவுக்கு புகார் மனுவை அளித்தார்.

மதுரை நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கும் தொடர்ந்துள்ளார். தங்கள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக படத்தை தடை செய்ய கோரி திருச்சியில் புதிய தமிழக கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்து 34 பேரை கைது செய்து அருண் ஓட்டலில் உள்ள சுமங்கலி மகா ஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.

 

ஹவ்தா....??

பெங்களூரு: பாலிவுட் "பாடி ஸ்டார்" சல்மான் கான் கன்னடப் படத்தில் நடிக்கப் போவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆனால் யாரும் பீதி அடையத் தேவையில்லை.. இது நேரடி கன்னடப் படம் இல்லை.. கன்னடப் படத்தின் ரீமேக்காம்.

இந்தியைத் தாண்டி திரும்பிக் கூடப் பார்க்காதவர் சல்மான் கான். இந்த நிலையில் அவரையும் கன்னடப் படம் ஒன்றையும் இணைத்து செய்தி கிளம்பியுள்ளது.

கோய்மோய் என்ற இணையதளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், கன்னடத்தில் வெளியான சங்கொல்லி ராயண்ணா படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கவுள்ளாராம். கன்னடத்தில் தர்ஷன் நடித்த வேடத்தில் சல்மான் நடிப்பாராம்.

ஹவ்தா....??

ஏற்கனவே போக்கிரி, பாடிகார்ட் உள்ளிட்ட தமிழ் படங்களின் ரீமேக்கில் நடித்தவர் சல்மான் கான். இந்த நிலையில் கன்னட ரீமேக்கில் அவர் கை வைக்கவுள்ளார்.

தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சல்மான். அதை முடித்து விட்டு இந்த கன்னட ரீமேக்குக்கு வருவார் என்கிறார்கள்.

ஹவ்தா (அப்படியா) சல்மான்ஜி?!

 

தேனியில் 'நான் கடவுள்' பட நடிகை மானபங்கம்: 2 வாலிபர்களுக்கு வலை

தேனி: தேனியில் நான் கடவுள் படத்தில் பூஜாவுக்கு தோழியாக நடித்த முருகேஸ்வரி நடுரோட்டில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பூஜாவின் தோழியாக நடித்தவர் தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகேஸ்வரி(38). தேவதானப்பட்டியில் வசித்து வரும் அவர் கடந்த சனிக்கிழமை அன்று வத்தலக்குண்டு சென்றுள்ளார்.

நடுத்தெருவில் ஆடையை கிழித்து 'நான் கடவுள்' பட நடிகை மானபங்கம்

வத்தலக்குண்டில் இருந்து பேருந்து மூலம் தேவதானப்பட்டி வந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அவர் தனியாக செல்வதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் அவர் பின்னால் சென்றுள்ளனர்.

அந்த வாலிபர்கள் முருகேஸ்வரியை வழிமறித்து திடீர் என அவரது ஆடையை கிழித்து மானபங்கம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேஸ்வரி உதவி தேட்டு அலறினார். அந்த வாலிபர்களோ முருகேஸ்வரியை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முருகேஸ்வரி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

 

வந்தது "மணப்பெண்" களை... பட்டுச் சேலையில் ஜொலித்த ஸ்ருதி....!

அழகான பட்டுப் புடவையில் அப்படியே அம்சமாய் ஜொலித்தார் ஸ்ருதி ஹாசன். மகளை சேலையில் பார்த்தாலோ என்னவோ தந்தை கமல்ஹாசனின் முகத்திலும் கூடுதல் பூரிப்பு + புன்னகை.

ஹைதரபாபாத்தில் நடந்த உத்தமவில்லன் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்த சுவாரஸ்ய காட்சி.

அரை குறை உடைகள், மாடர்ன் உடைகளிலேயே பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு ஸ்ருதி பட்டுச் சேலையில் அமெரிக்கையாக காட்சி அளித்தது வியப்பில் ஆழத்தி விட்டது.. அடடா, நம்ம ஸ்ருதியா இது என்று தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டனர் பலரும்.

வந்தது

கெளரங் ஷா பட்டுச் சேலையில் பார்த்தவர்கள் குஷி அடையும் வகையில் தேவதை போல வந்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அவரை சேலையில் பார்த்த பலருக்கும், ஓகே, பொண்ணுக்கு மணப்பெண் களை வந்து விட்டது.. இனி அப்பா கமல் மாப்பிள்ளை தேட வேண்டியதுதான் என்று சிரித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசனும், ஸ்ருதியை சேலையில் பார்த்த சந்தோஷத்திலோ என்னவோ கூடுதல் பூரிப்புடன் காணப்பட்டார்.. அவர் மட்டும் என்னவாம்... அழகான சில்வர் கிரே கலர் சூட்டிலும், அதற்கேற்ற கருப்பு நிற கோட்டிலும் வழக்கம் போல டிரஸ்ஸிங் சென்ஸில் பட்டையைக் கிளப்பியிருந்தார்.

 

'முதுகுளத்தூர் கலவரத்தை நினைவூட்டும் காட்சிகள்... வேண்டாம் கொம்பன்!'- நாடார் சங்கம் அறிக்கை

சென்னை: கொம்பன் படத்தின் காட்சிகள் முதுகுளத்தூர் கலவரத்தை நினைவூட்டுவதாகவும், நிச்சயம் இதனால் சாதிக் கலவரம் ஏற்படும் என்றும் கூறியுள்ள நாடார் சங்கம், படத்துக்குத் தடை கோரியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வருக்கு அனுப்பிய மனு விபரம்:

"சுதந்திர போராட்ட தியாகி, வாய்ப்பூட்டு சட்ட வீரர், பேரையூர் வேலுச்சாமி நாடாரைக் களங்கப்படுத்தும் காட்சிகள் நடிகர் கார்த்தி நடித்து, முத்தையா இயக்கி வெளிவரவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் உள்ளதாகவும் முதுகுளத்தூர் கலவரப் பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளதாகவும் வார இருமுறை இதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

'முதுகுளத்தூர் கலவரத்தை நினைவூட்டும் காட்சிகள்... வேண்டாம் கொம்பன்!'- நாடார் சங்கம் அறிக்கை

[கொம்பன் படங்கள்]

தனது சமுதாயத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத ரேகைச் சட்டம் (எ) படுக்கை சட்டத்தின் கொடுமைக்கு ஆளான மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது சமுதாய மக்கள் ஏழாயிரம் பேரைத் திரட்டி போராடி வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளானவர் வீரர் வேலுச்சாமி நாடார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் முதுகுளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்க தேவருக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது.

'கொம்பன்' பட இயக்குநர் வீரர் வேலுச்சாமி நாடாரின் தியாகத்தை புரிந்து கொள்ளாமல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு அவர்தான் காரணம் என்பது போல் காட்சிகள் வைத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற காட்சிகளுடன் 'கொம்பன்' திரைப்படம் திரையிடப்பட்டால் தென் தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

படத்தின் தலைப்பே (ஆப்ப நாட்டு மறவன்) 'கொம்பன்' என்கின்ற பெயரில் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே இது மிகப்பெரிய ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.

கடந்த 6 மாதங்களில் தென் மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் 'கொம்பன்' திரைப்படத்தை திரையிட்டால் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல கலவரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்து அமைதியை நிலைநாட்டிட தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

என்ன அவரா அப்படி? ... அலறடிக்கும் "ஆட்டோகிராப்" மல்லிகா!

சென்னை: இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள நடிகை மல்லிகா அவரது படத்தில் நடிகைகள் நடிக்கத் தயங்கும் துணை நடிகை கேரக்டரில் துணிச்சலாக நடித்து வருகின்றார்.

ஆட்டோகிராப் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மல்லிகா, அதன்பின்னர் பல படங்களில் தங்கை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் இயக்குனராக மாறியுள்ளார்.

என்ன அவரா அப்படி? ... அலறடிக்கும்

"பழனியிலே கனகம்" என்ற மலையாளப் படத்தில் இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கும் மல்லிகா, இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். நடிகை பாவனா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் மல்லிகா துணை நடிகையாக நடித்துள்ளார்.

சினிமா உலகில் நடிகைகளும், துணை நடிகைகளும் படக்குழுவினர்களால் என்னென்ன தொந்தரவுகள் அனுபவிக்கின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக படமாக்கியிருப்பதாக கூறியுள்ளார் மல்லிகா.

மேலும், இந்த படத்தின் துணை நடிகை வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகள் யாரும் சம்மதிக்காததால், துணிச்சலாக நானே இந்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த படம் நடிகைகளின் மறுபக்கத்தை அப்பட்டமாக வெளிக்கொண்டு வரவிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தத் தடை!

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் ஆண்டு தோறும் கோடையில் சீஸன் தொடங்கிவிடும். ஏப்ரல் முதல் ஜூன் - ஜூலை வரை ஊட்டியில் மக்கள் குவிந்துவிடுவார்கள். கோடையைச் சமாளிக்க இங்கேயே மாதக்கணக்கில் தங்குவோரும் உண்டு.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தத் தடை!

இவர்களுக்காகவே ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியவை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே கோடை வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த மார்ச்சில், அக்னி நட்சத்திரத்துக்கு இணையாக வெளியில் கொளுத்துகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை ஊட்டியில் அதிகரித்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகளுக்கு பரீட்சை முடிந்ததும் விடுமுறை அறிவிக்கப்படும்.

அதன் பின்னர் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருப்பதற்காக வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சினிமாக்காரன் சாலை - 18: ‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

சற்றுமுன் ‘லிங்கா' கோஷ்டிகளிடமிருந்து மற்றுமொரு ஒப்பாரி மெயில்.

‘எட்டாவது கோஷ்டியும் பதினெட்டாவது கோஷ்டியும் கூட்டு சேர்ந்துக்கிட்டு எங்களை நாமம் போடப் பாக்குறாங்க'- இப்படிக்கு நாப்பத்தி எட்டாவது கோஷ்டி.

இந்த மெயில் 853 வது என்று நினைக்கிறேன். இந்த மெயில்கள் காகிதத்தில் அறிக்கைகளாக தரப்பட்டிருந்தால் அவைகளை எடைக்குப் போட்டே பத்திரிகையாளர்களெல்லாம் பணக்காரர்களாகியிருப்பார்கள் எனுமளவுக்கு நாளொரு கோஷ்டியும் பொழுதொரு அறிக்கையுமாய் நாறிக் கொண்டிருக்கிறது.

‘இனிமேல் அறிக்கைகளை மெயிலில் அனுப்பாமல் பேப்பரில் அனுப்பும் வரை சிங்காரவேலன் இல்லத்தின் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினால் என்ன? நாங்கல்லாம் எப்பதான்யா செட்டில் ஆகுறது?'

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் போய்விட்டு ‘லிங்காமாரி' கோஷ்டிகளின் பஞ்சாயத்து வருவோம்.

‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

‘பிதாமகன்' ரிலீஸான சமயம். அப்போது நான் 24 மணிநேரமும் பாலாவுடன் இருந்தேன். நண்பன், மேனேஜர், அன்புக்காக சமையல்காரன், மக்கள் தொடர்பாளர், செயின் ஸ்மோக்கரான அவரிடமிருந்து அவ்வப்போது சிகரட்டைப் பிடுங்கி டஸ்ட்பின்னில் போடுபவன், ஐந்தாவது ரவுண்டைத்தாண்டும்போது அதட்டுபவன் என்று பெப்ஸியின் 24 சங்கங்கள் செய்த அத்தனை வேலையையும் அவருக்காக செய்து வந்தேன்.

'பிதாமகன்' ரிலீஸான மறுநாளிலிருந்தே அடுத்த படம் தங்களுக்கு இயக்கித்தரச்சொல்லி வந்த அழைப்புகள் மட்டும் சுமார் நூறு இருக்கும். பெரும்பாலும் பாலாவின் போனை நான் தான் எடுத்து பதில் சொல்வேன்.
அப்போது அடுத்த படம் அஜித்துடன் இணைந்து செய்யலாம் என்ற ஒரு எண்ணம் பாலாவுக்கு இருந்தது.

‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

வந்த அழைப்புகளில் ஒன்று அப்போது அஜீத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முன்னணி தயாரிப்பாளருடையது. ஒரு க்ளூ மட்டும் தருகிறேன். அஜீத்துடன் நெருக்கமாக இருந்தபோது நிக்'க நேரமில்லாமல் இருந்தவர்.

‘நேர்ல போய் பேசிட்டு வாங்க. நமக்கு நல்ல சம்பளம் தருவாருன்னா இவருக்கே அடுத்த படம் பண்ணிரலாம்' என்றார் பாலா.

என்னை அதற்கு முன் நூறுமுறையாவது சந்தித்திருந்தவர்தான் எனினும் புது அறிமுகம் போலவே எதிர்கொண்டார்.

சில சம்பிரதாய பேச்சுக்கு அப்புறம் சம்பளப் பேச்சு வந்தது.

‘அஜீத் இப்ப சம்பளத்தை டபுள் மடங்கா ஏத்திட்டார் (அப்போது அஜீத்துக்கு கால்ஷீட் பார்த்தவரே அந்தப் புண்னியவான்தான்) அதனால பாலா சம்பளத்தை பாத்து சொன்னீங்கன்னா நீங்க எப்ப ரெடியோ அப்ப படத்தை ஆரம்பிச்சிடலாம். பாலா எவ்வளவு எதிர்ப்பாக்குறானு சொல்லுங்க?' என்றார்.

அந்த சமயம் அஜீத் ஒரு கோடி அளவில் சம்பளம் வாங்க ஆரம்பித்திருந்தார். அதனால் பாலாவும் அதே சம்பளம் எதிர்ப்பார்த்தார்.

அதை அப்படியே சொல்லமுடியாது. ஈகோ வரும். எனவே நான் ‘எங்களுக்கு அப்படி தொகையா ஒரு ஐடியாவும் இல்ல. நீங்க சொல்லுங்க சார். பாலாவுக்கு என்ன தரலாம்னு?' என்றேன்.

‘ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரேன் ப்ரதர்' என்றபடி, ஆபிஸ் பையனிடம் ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டுவரச்சொல்லி என் எதிரிலேயே பட்ஜெட் போட ஆரம்பித்தார். கவனியுங்கள். அப்போது எங்கள் தரப்பில் கதை பற்றி ஒரு வரி கூட சொல்லப்படவில்லை.

அந்த பட்ஜெட்டில் அவர் முதன்முதலில் என்ன எழுதினார் தெரியுமா?

'வட்டி - 2 கோடி' என்றுதான்.

‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

அடுத்துதான் அஜித் சம்பளம். அலுவலக செலவுகள். படப் பிடிப்புச் செலவுகள். இதர நட்சத்திரங்கள். இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று எழுத ஆரம்பித்தார். இறுதியில் பட்ஜெட்டை பக்காவாக பதினொன்றரை கோடியில் முடித்து விட்டு ‘அஜித் சாருக்கு 12 கோடிக்கு பிசினஸ் இருக்கு. எனக்கு லாபம்லாம் வேண்டாம். (அடேங்கப்பா) இப்ப பாலா சம்பளம் சொல்லுங்க ப்ரதர்' என்றார்.

'பாலா கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு ஒரு மணி நேரத்துல வரேன் சார்' என்றபடி கிளம்பியவன்தான். 'வட்டி சுட்டதடா. படம் கிட்டாதுடா' என்று பாடியபடி அவருக்குப் படம் பண்ணும் திட்டத்தை கைவிட்டோம்.

சினிமாவை விட்டு வெகு தூரம் இருப்பவர்களுக்கு இதை நம்ப கஷ்டமாக இருக்கும். சினிமாவைக் கரைத்துக் குடித்தவர்கள் பெரும்பாலும் சொந்தக் காசில் படம் பண்ணுவது இல்லை. இன்றும் பழைய தயாரிப்பாளர்கள் படம் துவங்கும்போது, பட்ஜெட்டில் முதல் கணக்காக வட்டியைத்தான் எழுதுகிறார்கள். பெரிய விநியோகஸ்தர்களும் அங்ஙனமேதான்.

இப்போது ‘லிங்கா' மேட்டருக்கு வருவோம். அய்யோ...நஷ்டம்,... துட்டு போச்சி.... பிச்சை எடுத்து பொழைக்கப் போறேன்...எலி மருந்து குடிக்கப் போறேன்... தூக்கு மாட்டி தொங்கப்போறேன்'...' என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்களே விநியோகஸ்தர்கள், அவர்கள் கணக்கிலும் 'லிங்கா'வை வாங்கிய வகையில் முதலில் வரப்போவது வட்டிக் கணக்குத்தான். அப்புறம் அலுவலக நிர்வாக செலவுகள். பூ, மலர், புஷ்பக் கணக்குகள் என்று நீளும்.

ஒரிஜினல் வசூலை ஒருநாளும் வெளியே சொல்ல மாட்டார்கள்.

இப்போது நடந்து வரும் அடிதடியை சற்றே கவனித்துப் பாருங்கள் சிங்காரவேலன் என்பவர் துவங்கி ஒருத்தராவது 'நான் இத்தனை தியேட்டரில் ரிலீஸ் செய்தேன். இவ்வளவு வசூலானது. இதான் நான் வசூலித்த கட்டணம்.. இந்தாருங்கள் வசூல் விபரம். இது எனக்கு ஏற்பட்ட நஷ்டம்' என்று கணக்குத் தந்திருக்கிறார்களா? தரமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வசமிருப்பது கள்ளக் கணக்கு பொய்க் கணக்கு.

இதனால்தான் ரஜினியிடமிருந்தும், ராக்லைன் வெங்கடேஷிடமிருந்தும் இவர்கள் கேட்ட பணம் வந்தும் முறையாக பிரித்துக் கொள்ள முடியவில்லை. திருடர்கள் பங்கு போடும்போது சண்டை வருவது சகஜம்தானே? அதுதான் இப்போது நடந்து வருகிறது.
நடுவில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகள் இதில் பங்கு கேட்கிறார்கள் என்ற புலம்பலும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நீங்கள் நியாயமற்ற முறையில் ‘ஆட்டயப்போடுவது' தெரியுமென்பதால் உரிமையோடு எடுத்துக் கொள்ள நினைக்கிறார்கள். சுபகாரியம் நடக்கட்டும்.

இப்போது இருக்கிற நிலைமையைப் பார்த்தால் இந்த சண்டையும் அழுகுணி ஆட்டங்களும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது நடக்கும்போல் தெரிகிறது.

இந்தக் காட்சிகளை தொடர்ச்சியாக காணும்போது வடிவேலு படக் காமெடி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.

அல்வா வாசு ஒரு உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் தற்கொலை செய்ய முயன்று பயந்து உட்கார்ந்திருப்பார். அவர் எப்படா தற்கொலை செய்து கொள்வார் என்று ஒரு பெருங்கூட்டமே பந்தயம் கட்டி ஆர்வத்துடன் காத்திருக்க, ஆர்வக் கோளாறு வடிவேலு மட்டும் அவரை நெருங்கிப் போய்,' 'டேய்..டேய்... இப்ப என்ன பண்ணப்போறே?' என்பார்.

‘கீழ குதிக்கப் போறேன்'

'ஆமா அதுக்கு ஏன் உக்காந்திருக்க?'

‘நின்னு குதிக்க பயமாருக்கு. அதான்'

‘சரி இப்ப உனக்கு என்னடா பிரச்சினை?

‘எல் காதல் ஃபெயிலாயிடுச்சி. நான் லவ் பண்ண பொண்ணு திடீர்னு ஒருநா அவ புருஷன் கூட ஓடிப்போயிட்டா'

‘அட நன்னாரிப் பயலே.. சரி இப்ப நீ கீழ குதிச்சும் சாகலை. அப்ப என்ன செய்வ.. அப்ப என்ன செய்வ?'

'இந்தா இந்தக் கயிறுல தொங்குவேன்'

'அப்பயும் சாகலைன்னா?'

‘இந்த இந்தக் கத்தி எடுத்து கழுத்தை அறுத்துக்குவேன்'

‘அட அப்பயும் சாகலைன்னா?'

‘இருக்கவே இருக்கு வெடிகுண்டு'

‘அதெங்கடா இருக்கு? -வடிவேலு

‘அட போங்கண்ணே அதுமேலதான நீங்க உக்காந்திருக்கீங்க. எழுந்திச்சிராதீங்க வெடிச்சிரும்' என்று போகும் அந்தக் காமெடி.

எனக்கென்னவோ 'லிங்கா நஷ்ட ஈடு கோஷ்டிகள்' மொத்தமும் அந்த வெடிகுண்டு சாக்கின் மீது உட்கார்ந்திருப்பது போலவே தோணுகிறது!

(தொடர்வேன்)

 

விஜய்யுடன் முதல் முதலாக நடிக்கும் ராதிகா

விஜய் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் முதல் முறையாக அவருடன் நடிக்கிறார் சீனியர் நடிகை ராதிகா சரத்குமார்.

தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக 'ராஜா ராணி' படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்கிறார். இவர் விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி படங்களை இவர் தான் தயாரித்திருந்தார்.

விஜய்யுடன் முதல் முதலாக நடிக்கும் ராதிகா

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்பதும், இப்படத்திற்கு அட்லியின் ‘ராஜா ராணி' படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள ராதிகா சரத்குமார் இதுவரை விஜய்யுடன் மட்டும் நடிக்கவில்லை.

இப்போது அந்தக் குறை தீர்ந்த சந்தோஷத்தில் சமூக வலைத் தளங்களில் தகவலைப் பகிர்ந்து வருகிறார்.

 

எல்லாம் அறிந்தவர் கமல்... - எஸ்பி பாலசுப்பிரமணியன்

கமல் ஹாஸனுக்கு தெரியாத விஷயமே கிடையாது. அவர் எல்லாம் அறிந்தவர் என்று பாராட்டினார் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன்.

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாதில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் நடிகர் கமல் ஹாஸன், நாயகிகள் ஆன்ட்ரியா, பூஜா குமார், கமல் மகள் ஸ்ருதி ஹாஸன், நடிகை கவுதமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எல்லாம் அறிந்தவர் கமல்... - எஸ்பி பாலசுப்பிரமணியன்

விழாவில் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.

அவர் கூறுகையில், "சினிமாவில் என்னை அண்ணா என்று உரிமையுடன் அழைப்பவர்களில் ஒருவர் கமல்ஹாஸன். மகா அற்புதமான கலைஞர். அவருக்குத் தெரியாத வித்தைகளே கிடையாது. அவர் ஒரு கலைக்களஞ்சியம் மாதிரி.

எல்லாம் அறிந்தவர் கமல்... - எஸ்பி பாலசுப்பிரமணியன்

அவரிடமும் இயக்குநர் பாலச்சந்தரிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

தெலுங்கில் கமல் நடித்து சாதனைப் படைத்த சாகர சங்கமம், சுவாதி முத்யம் போன்ற படங்களின் வரிசையில் இந்த உத்தம வில்லனும் அமையும் என நம்புகிறேன்," என்றார்.

 

வை ராஜா வை படத்தில் 'கொக்கி குமாரு' தனுஷை மீண்டும் பார்க்கலாம்!

கொக்கி குமாரு... இது புதுப்பேட்டை படத்தில் வை ராஜா வை படத்தில் 'கொக்கி குமாரு' தனுஷை மீண்டும் பார்க்கலாம்!  

இப்போது அவர் ஆசை நிறைவேறியிருக்கிறது. அந்த கொக்கி குமார் வேடத்தில் மீண்டும் நடித்திருக்கிறார் தனுஷ்.

மனைவி ஐஸ்வர்யா இயக்கிவரும் வை ராஜா வை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அந்த கொக்கி குமார் வேடத்தைத் தொடர்கிறாராம் தனுஷ்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொக்கி குமாரை பார்க்கப் போகிறீர்கள். என் கணவர் நடித்ததிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த வேடம் கொக்கி குமார்தான். வை ராஜா வை படத்தில் தனுஷை அந்த வேடத்தில் பார்த்து ஆச்சர்யப்படுவீர்கள். நான் சொல்வதைவிட, அதை திரையில் நீங்கள் பார்க்க வேண்டும்...," என்றார்.

வரும் ஏப்ரல் 24-ம் தேதி வை ராஜா வை திரைக்கு வருகிறது. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

மியா ஜார்ஜ் - தினேஷின் 'ஒரு நாள் கூத்து'

"திருடன் போலீஸ்" வெற்றியை தொடர்ந்து கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் "ஒரு நாள் கூத்து".

இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார்.

மியா ஜார்ஜ் - தினேஷின் 'ஒரு நாள் கூத்து'

மற்றும் கருணாகரன், பாலசரவணன், முண்டாசுபட்டி ராமதாஸ், ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இவர் பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்தவர். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். நெல்சன் இப்படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு நாளை சென்னையில் ஆரம்பமாகிறது.

படம் குறித்து இயக்குநர் நெல்சன் கூறுகையில், "இது ஒரு இளமை ததும்பும் வண்ணமயமான கதை அமைப்பை கொண்ட படமாக இருக்கும். தற்போதுள்ள இளைஞர்களை வெகுவாக கவரும். அவர்களின் வாழ்க்கை பிரதிபலிப்பை உருவாக்கும். இதனால் இப்படத்தில் ஈசியாக ஒன்றிப்போய் விடுவார்கள்," என்றார்.

 

சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகலுக்குப் பிறகு படத்துக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

அரசு தரப்பு வழக்கறிஞரோ, "அப்படி எதுவும் நிகழாது'' என்றார்.

உடனே நீதிபதி தமிழ் வாணன், "சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?'' என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார்.

இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.

 

நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ருதிஹாஸன் மீது மோசடி வழக்கு

ஹைதராபாத்: நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பி்விபி சினிமா நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ், தெலுங்கு படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். படப்பிடிப்புக்கு தேதிகளை ஒதுக்கி தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பாக ஸ்ருதிஹாசனுக்கு எதிராக ஐதராபாத் 25-வது கூடுதல் தலைமை சிட்டி சிவில் கோர்ட்டில் பட நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ருதிஹாஸன் மீது மோசடி வழக்கு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடுத்துள்ள நிறுவன படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு (ஏப்ரல் 8-ந்தேதி வரை) நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு ஜூபிளி ஹில்ஸ் போலீஸ் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதால் அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

 

எப்பப் பார்த்தாலும் ‘அதை’ப் பத்தியே கேட்குறாங்களே... நொந்து நூடுல்ஸாகும் நடிகை!

சென்னை: சமீபகாலமாக செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறாராம் சின்னப்பூ நடிகை.

காரணம் முன்பெல்லாம் அவரது முறிந்து போன காதல் குறித்து கேள்விக்கணைகளை வீசியவர்கள் தற்போது புதிதாக குளியல் வீடியோ பற்றியும் கேட்கிறார்களாம்.

சமீபத்தில் நடிகையின் குளியல் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்தது. அது மார்பிங் செய்யப்பட்டது என சிலர் சமாளித்தாலும், அது நடிகையோடது தான் என சிலர் சத்தியம் செய்கிறார்கள். அந்த மனவேதனையைப் போக்கிக் கொள்வதற்காகவே வெளிநாடு சென்று விடுமுறையைக் கொண்டாடினார் நடிகை.

ஆனால், அதனை மறக்க விடாமல் தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் அது தொடர்பாகவே கேள்வி எழுப்புவதால் நடிகை வேதனையில் உள்ளாராம்.

இதனால், தனது சேவைகளைப் பற்றிய செய்திகளை பரவ விட்டு, குளியல் வீடியோவை மக்களை மறக்கச் செய்ய வேண்டும் என தனது மேனேஜர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளாராம்.

 

தடைகள் வந்தாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன்: கமல்

சென்னை: எனக்கு இடையூறுகள் அளித்தாலும் என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. நான் தொடர்ந்து நடிப்பேன் என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

தன்னையே சிலர் குறிவைப்பதாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். சண்டியர் என கமல் தனது படத்திற்கு தலைப்பை தேர்வு செய்து பிரச்சனையில் சிக்கினார். அதையடுத்து கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், விஸ்வரூபம் ஆகிய படங்களும் பிரச்சனையை சந்தித்தன.

என்னால் சும்மா இருக்க முடியாது: கமல் ஹாஸன்

அதிலும் விஸ்வரூபம் படத்தை வெளியிட கமல் ஹாஸன் படாதபாடு பட்டார். நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறும் அளவுக்கு அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை நினைத்து முடங்கிவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து கமல் கூறுகையில்,

நாந் நடித்துள்ள பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனாலும் சரி அல்லது தாமதமானாலும் சரி நான் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன். என்னால் சும்மா உட்கார முடியாது. ரசிகர்களுக்கு நல்ல படங்களை அளிக்க விரும்புகிறேன். அவர்களும் அதைத் தான் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கக் கூடாது, அதை தடுக்கவும் முடியாது என்றார்.

 

லகலக... லகலக... துரத்தும் பிரச்சினைகளால் மீண்டும் இமயமலைக்கு பறக்கும் ‘சூப்பர்’!

சென்னை: சமீபகாலமாக சூப்பரையும், அவரது குடும்பத்தாரையும் பிரச்சினை துரத்தி துரத்தி அடித்து வருகிறது. இதனால் நடிகர் ரொம்பவே வேதனையில் உள்ளாராம்.

முதலில் பொம்மைப்படத்திற்கு பிரச்சினை வந்தது, கஷ்டப்பட்டு நடிகர் தனது மகளைக் காப்பாற்றினார். பின்னர் திரையில் அணை கட்டியவரை மீண்டும் துரத்தியது பிரச்சினை. தலைக்கு மேல் வெள்ளம் போவதை உணர்ந்து, உரியவர்களை அழைத்து பிரச்சினையை சுமூகமாக முடித்தார்.

ஒரு வழியாக பிரச்சினைகள் முடிந்தது என நடிகர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்னதாக, மனைவிக்கு வந்தது பிரச்சினை.

தொடர் பிரச்சினைகளால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் நடிகர். எனவே, விரைவில் நிம்மதி தேடி இமயமலைக்கு ஒரு பயணம் சென்று வரும் முடிவில் இருக்கிறாராம்.

 

திருட்டு "காக்கிச் சட்டை"யை கையும் களவுமாக பிடித்த கரூர் போலீஸ்!

கரூர்: கரூர் நகரில் திருட்டு பட சிடிக்கள் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.

கரூர் நகரில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம்புது திரைப்படங்கள் திருட்டு வி.சி.டியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கரூர் பேருந்து நிலையம், ஜவஹர் பஜார், மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.

திருட்டு

அப்போது, புதுப்பட சி.டிகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதில் எனக்குள் ஒருவன், அனேகன், காக்கிசட்டை, வெள்ளைக்காரத்துரை, கதம் கதம், டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் சிக்கின.

மேலும் இதை விற்பனை செய்த கரூர் பாரதியார் தெருவில் வசிக்கும் முருகன் (எ) கார்த்திக் (வயது 30), பெரியார் நகர் பகுதியை சார்ந்த சரவணன் (வயது 32), செல்லாண்டிபாளையம் பகுதியை சார்ந்த திருமூர்த்தி (வயது 29), ஆகிய 3 பேரை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 200 புதுப்பட சிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டது,

 

"எங்கேயடா போயிருந்தீர்கள் கண்மணிகளா..."!

சென்னை: சில விஷயங்களை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.. அந்த வகையில் தமிழ் சினிமா காமெடிக்கு புது இலக்கணம் வகுத்தவை என்று சில அம்சங்கள் உள்ளன. அந்தக் கூட்டணிக்கு எப்போதுமே செம வரவேற்புதான்.. பார்த்ததும் ஒன்றிப் போய் சிரிக்க வைக்கும் வெற்றி பார்முலா அவை.

பழைய கவுண்டமணி செந்தில் படங்களில் அவர்களுடன் கூடவே ஒரு குரூப்பும் கூட வரும். வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, குள்ளமணி என சிலர். அந்தக் கூட்டணி வரும் காட்சிகள் எல்லாமே பட்டையைக் கிளப்பியவை. இன்றும் கூட வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைக்கும் குரூப் அது.

அதேபோல வடிவேலு படம் என்றால் அவருக்கென்று ஒரு குரூப் உள்ளது. அந்தக் குரூப் காமெடியை இப்போது பார்த்தாலும் சிரித்து சிலிர்க்கலாம்.

வடிவேலு, சிங்கமுத்து, அல்வா வாசு, தம்பி ராமையா, போண்டா மணி... என. இந்தக் குரூப் சேர்ந்து அதகளப்படுத்திய காட்சிகள் எத்தனை.. எத்தனை.. ஒவ்வொன்றும் ஒரு சுகம்.. ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

அந்தக் கூட்டணி இப்போது இல்லாமல் போய் விட்டது. சிங்கமுத்து இல்லை, தம்பி இல்லை.. அல்வா வாசுவும் இன்னும் சிலரும் மட்டுமே உள்ளனர். ஆனால் வடிவேலு நடிக்காமல் வனவாசம் இருந்து வந்ததால் இந்தக் கூட்டணியும் சேரும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

இந்த நிலையில் எலி படம் வருகிறது.. கோடை விடுமுறைக்கு வயிறுகளை குடைந்து குடைந்து சிரிக்க வைக்க வருகிறது.. இந்த படத்தின் சில ஸ்டில்களைப் பார்த்தபோது அந்த பழைய கூட்டணியின் நினைவலைகள் வந்து போயின.

இந்த எலி படத்தில் "அடி விழுதுகள்" இரண்டு பேர் "அண்ணனுடன்" அளவளாவும் காட்சி ஒன்றைப் பார்க்க முடிந்தது.

ஒருவர் வெங்கல் ராவ்.. இன்னொருவர் கடலில் கூட ஜாமீன் இல்லைன்னுட்டாங்க புகழ் பாவா லட்சுமணன். இவர்கள் இருவரும் வடிவேலுவுடன் நடித்த அத்தனை காட்சிகளும் அட்டகாசமானவை.. அந்த பஸ் காமெடி... கந்தசாமி படத்தில் வரும்... தேங்காய் வாங்கப் போய் திகைப்பிக்குள்ளாகி சிக்கி "நசுங்கி" புலம்பும் காமெடி... நிறைய நிறைய.

எங்கேயடா போயிருந்தீர்கள் என் கண்மணிகளா என்று வடிவேலு பாணியில் கேட்டு இந்த ஸ்டில்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்வோம்!

 

கம்யூனிஸ்டுகள் சுத்தத் தங்கம் மாதிரி.. ஆனா அத வச்சு நகை செய்ய முடியாது! - பாரதிராஜா

புதுவை: கம்யூனிஸ்ட்கள் சுத்தத் தங்கம் மாதிரி. சுத்தத் தங்கத்தை வைத்து எப்படி நகை செய்ய முடியாதோ அது மாதிரிதான் அவர்களும் என்றார் இயக்குநர் பாரதிராஜா.

புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மக்கள் கலைவிழா புதுவை காந்தி திடலில் நடந்தது.

கம்யூனிஸ்டுகள் சுத்தத் தங்கம் மாதிரி.. ஆனா அத வச்சு நகை செய்ய முடியாது! - பாரதிராஜா

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிராஜா பேசுகையில், "கலை அற்புதமானது.

மக்களுக்கான கலைகளை ஆரம்பித்ததே கம்யூனிஸ்டுகள்தான். மனிதன் வசதி வாய்ப்புகள் வரும் போது தனது சுயத்தை இழக்கிறான். சம்பாதிப்பவனுக்கு மூளை மழுங்குகிறது.

வறுமையில் இருக்கிறவனுக்குதான் வேகம் இருக்கிறது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் தாக்கப்படும் போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏன் உள்ளூர் தமிழர்கள் கூட அதனை தட்டிக் கேட்கவில்லை. ஆகையால் தமிழர்களுக்கு எதிர்ப்பு உணர்ச்சி வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் சுத்த தங்கம் போல் இருக்கக் கூடாது. சுத்த தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாதே," என்றார்.

 

புறம்போக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்த 'புறம்போக்கு' படம் வரும் மே 1ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'இயற்கை',' ஈ', 'பேராண்மை' படங்களுக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் 'புறம்போக்கு'. இந்தப் படத்தை யுடிவி நிறுவனமும் எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸூம் இணைந்து தயாரித்துள்ளது.

புறம்போக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வர்ஷன் இசையில் என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய ஷாம், கார்த்திகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பாலுவாக ஆர்யாவும், எமலிங்கமாக விஜய் சேதிபதியும், குயிலி என்ற பெயரில் கார்த்திகாவும், போலீஸாக ஷாமும் நடித்துள்ளனர்.

ராஜஸ்தான், அந்திரா, சென்னை, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் ட்ரைலர் சின தினங்களுக்கு முன் வெளியானது.

ஏப்ரல் முதல் வாரத்தில் இசை வெளியீடும், மே 1ல் படமும் வெளியாகும் என யுடிவி தனஞ்செயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளார்.

 

அஜித்துக்கு தங்கச்சியா? தெறித்து ஓடும் நடிகைகள்

பெரிய நடிகர்கள் வயசானவர்களாகவே இருந்தாலும்கூட ஜோடியாக நடிக்க போட்டி போடும் நடிகைகள், அவர்களுக்கு அக்கா தங்கை வேடம் என்றால் அலறியடித்து ஓடுகிறார்கள்.

அட முன்னணி நடிகைகள் என்றல்ல.. இரண்டாம் கட்ட நாயகிகள் கூட இதற்கு தயாராக இல்லை.

அஜீத் படத்துக்கும் இப்போது இதுதான் நடந்து வருகிறது. அடுத்து வீரம் சிவா இயக்கும் புதிய படத்திற்கு இரு நாயகிகள் தேவை.

அஜித்துக்கு தங்கச்சியா? தெறித்து ஓடும் நடிகைகள்

முதலில் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க வந்த நடிகைகள் இப்போது மறுக்கிறார்களாம்.

காரணம் ஒரு நாயகி அஜித்துக்கு ஜோடி.. இன்னொரு நாயகி அஜித்துக்கு தங்கச்சியாம். முதல் நாயகி வேடத்துக்கு ஸ்ருதியை ஓகே பண்ணிவிட்டார்கள்.

அஜித்துக்கு தங்கச்சிதான் கிடைத்தபாடில்ல. சரி, வேணாம்.. தமிழே தெரியாத யாராவது ஒரு மும்பை மாடலைப் பிடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் இயக்குநர்!

 

விசாரணை பட ட்ரைலர் வெளியீடு: எடிட்டர் கிஷோருக்கு சமர்ப்பணம் செய்தார் வெற்றிமாறன்

தனது விசாரணை படத்தின் ட்ரைலரை சமீபத்தில் காலமான எடிட்டர் கிஷோருக்கு சமர்ப்பிப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

விசாரணை பட ட்ரைலர் வெளியீடு: எடிட்டர் கிஷோருக்கு சமர்ப்பணம் செய்தார் வெற்றிமாறன்

ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கி வரும் படம் விசாரணை. இந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகளில் தீவிரமாக இருந்தபோதுதான் எடிட்டர் கிஷோர் மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவினார்.

இன்று இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் இந்த ட்ரைலரை என் அன்புக்குரிய எடிட்டர் கிஷோருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் வெற்றி மாறன்.

அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை தனுஷும் வெற்றி மாறனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

எம் சந்திரகுமார் எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் வரும் மே மாதம் வெளியாகிறது.

 

ஏப்ரல் 16-ம் தேதி மிரட்ட வருகிறது காஞ்சனா பேய்!

இந்த கோடை விடுமுறையில் ரசிகர்களைக் குதூகலப்படுத்த ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

கமல்ஹாஸனின் உத்தமவில்லன், விஜய்யின் புலி, வடிவேலுவின் எலி போன்ற படங்கள் கோடை விருந்தின் ஒரு பகுதி.

ஏப்ரல் 16-ம் தேதி மிரட்ட வருகிறது காஞ்சனா பேய்!

இந்த வரிசையில் இருக்கும் முக்கிய படம் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2. ஏற்கெனவே படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.

இந்த நிலையில் படத்தை வரும் ஏப்ரல் 16-ம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் வெளியாகி ஒரே வாரத்தில் காஞ்சனா வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்சி, நித்யா மேனன், கோவை சரளா, திவ்யதர்ஷினி, ஸ்ரீமன் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தெலுங்கிலும் நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.