சென்னை: வித்தியாச நடிகர் பசுபதியின் பிறந்த நாள் இன்று. தனது வில்லத்தனம் மற்றும் குணச்சித்திரம் என்று இரண்டு வகையான நடிப்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் நடிகர் பசுபதி.
கூத்துப் பட்டறை நடிகரான இவர் ஹவுஸ்புல் மற்றும் ஆளவந்தான் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தவர். நடிகர் நாசரின் மாயன் படத்தில் முதல்முறையாக வெளியே தெரியும்படியான ஒரு கேரக்டரில் நடித்தார்.
கன்னத்தில் முத்தமிட்டால், தூள் போன்ற படங்களில் தனது வில்லன் நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரட்டிய இவர் சில வருடங்கள் தமிழ் சினிமாவின் நிரந்தர வில்லன் நடிகராக வலம் வந்தவர்.
விருமாண்டி இவரது வித்தியாசமான நடிப்புக்கும், நடிப்புத் தீனிக்கும் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தமிழின் பிரபல நடிகராகவும் உயர்ந்தார்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்திருக்கிறார். ஈ படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த வில்லன் விருதைப் பெற்றவர்.
தேசிய விருது வாங்கிய வெயில் படத்தில் தனது சிறந்த குணச்சித்திர நடிப்பை அளித்திருப்பார். இன்று (மே 18)ல் நடிகர் பசுபதி தனது 46 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
மறுபடியும் தமிழ்ல ஒரு ரவுண்டு வாங்க சார்..!
Post a Comment