ஹைதராபாத்: செம்மரக் கடத்தல் வழக்கிலிருந்து என்னை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நடிகை நீத்து அகர்வால் மிரட்டியுள்ளார்.
செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழர்கள் 2௦ பேர் ஆந்திர போலீசால் சுட்டுக் கொல்லப் பட்டதும் தேசிய அளவில் இந்த வழக்கு கவனம் பெற்றது. மழை விட்டும் தூவானம் விடாது என்று சொல்லும் அளவிற்கு இந்த வழக்கில் நாள்தோறும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
செம்மரக் கடத்தல் வழக்கில் தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தெலுங்கு நடிகையான நீத்து அகர்வால் தெலுங்கில் ஒரு நடிகையாக வலம் வந்தார். தற்போது செம்மரக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டதால் அனைவரின் கவனமும் ஒரு சேர அவர் மீது திரும்பி உள்ளது.
தயாரிப்பாளர் மஸ்தான் அலி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ,மஸ்தான் கொடுமைப் படுத்தியதால் அவரை விட்டுப் பிரிந்தார். தற்போது தனது கணவரிடம் இருந்து தினசரி கொலை மிரட்டல் வருவதாக கூறுகிறார்.
செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் தினசரி கர்னூல் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். தினசரி கொலை மிரட்டல் வருவதால் நிம்மதி இழந்து தவிக்கிறாராம் நீத்து.
இந்த நிலையில், இப்போது எனது நிலையைப் பார்க்கும்போது நான் குற்றமற்றவள் என்பதை நிருபிக்க முடியாது போல் தோன்றுகிறது. இந்த வழக்கில் இருந்து நான் விடுவிக்கப்படாவிடில் தற்கொலை செய்து கொள்வேன் என்று பகிரங்க மிரட்டல் ஒன்றை தற்போது விடுத்துள்ளார்.
Post a Comment