சென்னை: தமிழ்ப் படமான ஜிகர்தண்டா கூடிய விரைவில் ஹிந்தி பேச இருக்கிறது.
தமிழ் மொழியில் வெற்றி பெற்ற படங்களை இந்தியிலும் ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
சமீபத்தில் தமிழ் படமான ரமணா இந்தியில் கப்பர் இஸ் பேக் என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப் பட்டு அங்கு வசூலைக் குவித்து வரும் வேளையில் மற்றொரு படமான ஜிகர்தண்டா தற்போது இந்தி பேச உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிய ஜிகர்தண்டா சரியாக ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே இந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது. நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மூவருக்கும் நல்ல பிரேக் கொடுத்த படம் இது.
இந்தப் படத்தில் அசால்ட் சேது என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார் நடிகர் பாபி சிம்ஹா. 1௦ கோடி செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 25 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்தியிலும் கார்த்திக் சுப்புராஜே இயக்க இருக்கிறார், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு கூடிய விரைவில் நடைபெற இருப்பதாக நெருங்கிய தொடர்புடையவர்கள் கூறுகின்றனர்.
சரி, யாருப்பா அந்த அலப்பறையான வில்லன் வேடத்தில் நடிக்கப் போவது...?
Post a Comment