அது என்னமோ சினிமாக்காரர்கள் சிலருக்கே கூட பிரேம்ஜி என்றாலே அலட்சியம். அண்ணனின் தயவில் தடாலடியாக முக்கிய இடம் பிடித்துவிடுகிறாரே என்ற பொறாைமையாகக் கூட இருக்கலாம்.
ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். இயல்பாக நடிக்கிறார் என்பதை ஏனோ இவர்கள் புரிந்து கொள்வதில்லை.
சினிமா செய்தியாளர்கள் சிலரும் கூட இப்படி ஒரு நினைப்பில் இருப்பது வெங்கட் பிரபுவுக்கு ஏக வருத்தம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத அவர் இப்படிச் சொன்னார்:
நான் எப்போதும் ஒரு கதையை எழுதும்போது, பிரேம்ஜியை ஒரு சிறிய கதாபாத்திரமாக வைத்துதான் எழுதத் தொடங்குவேன். அந்த கதாபாத்திரத்தை மேலும் மேலும் மெருகேற்ற அது படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வந்து அமையும். என்னுடைய படங்களில் பிரேம்ஜி நடிக்கவில்லையென்றால், அவர் என்னுடைய படத்துக்கு இசையமைப்பாளராக இருப்பார். நடிக்கிறார் என்றால் யுவன் இசையமைப்பாளராக பணியாற்றுவார்.
நாங்கள் மூன்று பேரும் கையெழுத்திடப்படாத ஒப்பந்தத்தின் பேரிலேயே ஒவ்வொரு படங்களிலும் பணியாற்றி வருகிறோம்.
பிரேம்ஜியை பிடிக்காதவர்களுக்கு, மாஸ் படத்தை பார்த்தால் அவரைப் பிடிக்க ஆரம்பிக்கும். அவரை என் தம்பியாக மட்டும் பார்க்க வேண்டாம். ஒரு நடிகனாக, கலைஞனாகப் பாருங்கள்," என்கிறார்.
Post a Comment