காஷ்மீர்: காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தனது முன்னாள் காதலியான கத்ரீனா கைஃபின் நினைவு வந்துவிட்டது.
சல்மான் கான் இயக்குனர் கபீர் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு குறித்து அவ்வப்போது ட்விட்டரில் கருத்துகள் வெளியிட்டு வருகிறார் சல்மான். மேலும் காஷ்மீரில் தான் எடுத்துள்ள புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
காஷ்மீரில் கரீனா கபூருடன் நடித்து வரும் சல்மான் கானுக்கு தனது முன்னாள் காதலியான கத்ரீனா கைஃபின் நினைவு வந்துள்ளது. ஏக் தா டைகர் படத்திற்காக அவரும், கத்ரீனாவும் ஆடிய மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்ற பாடல் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது. அந்த பாடல் பற்றி நினைத்த சல்மானுக்கு கத்ரீனாவின் நினைவும் வந்துள்ளது.
பாலிவுட்டில் நுழைந்த கத்ரீனா சல்மான் கானின் காதலியாக சில ஆண்டுகள் வலம் வந்தார். பின்னர் அவர் சல்மானை பிரிந்து சென்று நடிகர் ரன்பிர் கபூருடன் சேர்ந்துவிட்டார். ரன்பிர் கபூருக்கும், கத்ரீனாவுக்கும் விரைவில் திருமணம் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது.
காதல், திருமணம் பற்றி ரன்பிர் பேசினாலும் கத்ரீனா அது தொடர்பாக வாய் திறப்பதே இல்லை.
Post a Comment