"தல 56" ஆடியோ ரைட்ஸ்... கோடிகளைக் கொட்டி வாங்கியது சோனி நிறுவனம்!

|

சென்னை: மீண்டும் ஒருமுறை அஜித்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது இந்த நிகழ்ச்சி. தல 56 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

படப்பிடிப்பில் இருக்கும்போதே படத்தின் ஆடியோ ரைட்ஸை பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வாங்கியுள்ளது சோனி நிறுவனம். சோனியின் இந்த செயல் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஏற்கனவே அஜித்தின் பில்லா-2, ஆரம்பம் மற்றும் என்னை அறிந்தால் படத்தின் பாடல்களை வாங்கிய சோனி நிறுவனம் தற்போது நான்காவது முறையாக அஜித்தின் தல 56 படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்கியுள்ளது.

முன்னர் அஜித்தின் பில்லா 2 மற்றும் ஆரம்பம் படங்களுக்கு யுவன் இசையமைத்து இருந்தார், என்னை அறிந்தால் படத்தின் பாடல்கள் ஹாரிஸ் இசையமைப்பில் வெளிவந்தன. இந்தப் படத்தில் முதன்முறையாக அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் மற்றும் அஜித் இந்தப் படத்தில் முதல்முறையாக இணைகிறார்கள், அதனால் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பும் படம் தீபாவளி வெளியீடாக வருவதும் தான் சோனி இவ்வளவு விலைகொடுத்து இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கக் காரணமாம்.

 

Post a Comment