மலையாள நடிகை காவ்யா காவ்யா மாதவன் தனது சகோதரருடன் இணைந்து ஆன்லைனில் பிசினஸ் ஆரம்பித்துள்ளார். பட்டுப்புடவை, சுடிதார் என பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்வதற்காக லக்ஷய்.காம் என்ற இணையதள நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன், 2013 ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியான "ஐந்து சுந்தரிகள்' படத்துக்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. திருமணம் விவகாரத்து என சில காலம் ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். கேரளாவில் பெண்களே இயக்கும் கால் டாக்ஸிகள் மிகவும் பிரபலம். இதை அடிப்படையாக வைத்து "ஷி டாக்ஸி' என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியிருக்கிறது. இதில் நடித்துள்ளார் காவ்யா மாதவன். இந்தப்படம் சுமாராகவே போனது.
ஆன்லைன் வர்த்தகம்
இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அவர் இறங்கியுள்ளார். லக்ஷய்.காம் என்ற இணையதள நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.
ஆடைகள் விற்பனை
இதன் மூலம் பட்டுச் சேலைகள், சுரிதார்கள் உள்ளிட்ட பெண்களுக்கான உடைகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளார். இதன் தலைமை அலுவலகம் கொச்சியில் செயல்படும்.
சென்னை, பெங்களூருவில்
‘எனது சகோதரன் மிதுன் மாதவனுடன் இணைந்து ஆடை விற்பனை தொழிலில் இறங்கியுள்ளேன் என்று கூறியுள்ள காவ்யா மாதவன், சென்னை, பெங்களூருவிலும் கிளைகள் தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.
சினிமாவிலும் பிஸி
காவ்யா மாதவன் தற்போது, "ஆகாஷ்வாணி' என்ற படத்திலும், ஜீத்து ஜோஸப்பின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார், தனது திரையுலக மறு பிரவேசமும் வெற்றிகரமாகவே அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் காவ்யா மாதவன்.
Post a Comment