'டார்லிங்' ஜிவி பிரகாஷுக்கு இன்று பிறந்த நாள்!

|

சென்னை: தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இன்று 27 வது பிறந்த தினம்.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.

G.V.Prakash Turns 27

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்த அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ் என்பது பலரும் அறிந்ததுதான். 2006 ம் ஆண்டில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஜி.வி.பிரகாஷ் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் தவிர்த்து பாடகர், தயாரிப்பாளர் என்று வளர்ந்து தற்போது நடிகராகவும் மாறிவிட்டார்.

ஜென்டில்மேன் படத்தின் மூலம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஜென்டில்மேன் படத்தின் மூலம் ஒரு பாடகராக திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் ஜிவி.

இசையமைப்பாளராக மாற்றிய வெயில்

தரமான படங்கள் தரும் இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் முதன்முதலில் இசையமைப்பாளராக மாறினார்.

குறுகிய காலங்களில் 50 படங்கள்

சினிமாவிற்கு வந்து இந்தப் 10 ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களை முடித்து விட்டார்.

பின்னணிப் பாடகராக

பின்னணிப் பாடகராக இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடி இருக்கிறார்.

தயாரிப்பாளர்

மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தமிழ்த் திரையில் காலடி பதித்தவர்.

இளம் நடிகராக

பென்சில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் பென்சில் படத்திற்கு முன்பு இவரின் நடிப்பில் டார்லிங் படம் வெளிவந்து வெற்றிப் படமாகிவிட்டது.

சைந்தவி வாழ்க்கைத் துணைவி

சிறு வயதில் இருந்து ஜி.வி.பிரகாஷின் தோழி மற்றும் தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடகியான சைந்தவியை பல ஆண்டுகளாகக் காதலித்து கடந்த 2013 ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்

6 முறை பிலிம்பேர் விருதையும், சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகளை இரண்டு முறையும் ( ஆடுகளம், நீர்ப்பறவை) பெற்றுள்ளார். இதைத் தவிர ஏராளமான தொலைக்காட்சி மற்றும் மிர்ச்சி தென்னிந்திய விருதுகளையும் பெற்றுள்ளார் ஜிவி பிரகாஷ்.

 

Post a Comment