மும்பை: பாலிவுட்டின் ஹாட் ஜோடியான சைப் அலிகான்- கரீனா கபூர் ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
2012 ம் ஆண்டில் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்ட கரீனா தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சைப் அலிகானின் அடுத்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார் கரீனா. இவர்கள் இருவரும் இணையும் 7 வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கரீனா தற்போது சல்மானுடன் பஜ்ரங்கி பைஜான், ஷாஹித் கபூருடன் உட்டா பஞ்சாப், அர்ஜுன் கபூர் ஜோடியாக ஒரு படம் இதைத்தவிர ராஜ்குமார் குப்தாவின் படம் என மொத்தம் நான்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சைப் அலிகான் தற்போது நடித்து வரும் ரங்கூன் படத்தை ஏறக்குறைய முடித்து விட்டார். எனவே சைப் அலிகான் தனது அடுத்த படத்தில் மனைவியான கரீனா கபூருடன் டூயட் பாடவிருக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் படத்தை இயக்கவிருப்பவர் இந்தியின் பிரபல இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானி.
Post a Comment