நாயகனாக நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகி விட்டன, இதுவரை ஜெயம் ரவி நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை வெறும் 14 மட்டுமே. அப்பா எடிட்டர், அண்ணன் இயக்குநர் என மொத்தக் குடும்பமுமே சினிமா பின்னணியில் இருந்தாலும் சமீப காலமாக தடுமாறி வருகிறார் ரவி.
கடைசியாக போன வருடம் நடித்து வெளிவந்த நிமிர்ந்து நில் படத்திற்குப் பின் இந்த வருடத்தின் பாதியில் இன்று வெளியாகி இருக்கிறது ரோமியோ ஜூலியட். தமிழின் முன்னணி நடிகையான ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கும் இந்தப் படம், காதலை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டிருக்கிறது.
பழமையை விட்டு விலகாத ஒரு இளைஞனுக்கும், நவ நாகரிக பெண்ணுக்கும் இடையிலான காதலைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ஏகப்பட்ட பிரச்சினைகளைக் கடந்து இன்று ஒருவழியாக வெளியாகி விட்டது.
துவண்டு கிடக்கும் ரவியின் மார்க்கெட்டை இந்தப் படம் தூக்கி நிறுத்தும் என நம்பும் விதமாக சமூக வலைதளங்களில் படத்திற்கு நல்ல கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர் படத்தைப் பார்த்த ரசிகர்கள்...பார்க்கலாம்.
Post a Comment