புலி பட நடிகர் சுதீப் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூர்: விஜய்யின் புலி படத்தில் நடித்துள்ள சுதீப் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் புலி. அந்த படத்தில் விஜய் அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்துள்ளார். அடுத்ததாக அவர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியாகும் படத்தில் நடிக்கிறார்.

Puli star Sudeep hospitalised

அந்த படத்தில் அஜீத்தின் மச்சினச்சி ஷாமிலி சுதீப் ஜோடியாக நடிக்கிறார். சுதீப் முதல்முறையாக நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதீப்பின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசிடிட்டிக்காக சிகிச்சை பெற்ற அவர் அன்றைய தினமே வீடு திரும்பியுள்ளார். சுதீப்புக்கு மைக்ரைன் மற்றும் முதுகுவலி பிரச்சனையும் உள்ளது.

புலி படத்தை சிம்புதேவன் பெரிதும் எதிர்பார்க்கிறார். இதற்கிடையே பாகுபலி படத்தை விட புலி படத்தில் அதிக கிராபிக்ஸ் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் புலி படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.

 

சர்வதேச ரொமான்டிக் இசையை கேட்க ஹை ட்யூன்ஸ் கேளுங்க

இசை மற்றும் லைப்ஸ்டைல் நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக வழங்கும் சேனல் யு.எப்.எக்ஸ், மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசைகளை அள்ளித்தருகிறது. "ஹை ட்யூன்ஸ்".

Hi Tunes is a back to back Channel UFX

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் பன் மொழி இசை மெட்டுகளையும்,ஆங்கில இசை மற்றும் ஆல்பம் நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கும் புதுமையான நிகழ்ச்சி.

Hi Tunes is a back to back Channel UFX

நேயர் விருப்பம் இன்றைக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது. ஹை டியூன்ஸ் நிகழ்ச்சியில் நேயர்கள் விருப்பபடி தென் இந்திய திரைப்பட பாடல்கள், சர்வதேச இசை மற்றும் ரொமான்டிக் இசை ஒளிபரப்பாகிறது. விரல் நுனியில் தொலைபேசி வாயிலாக நேயர்கள் கேட்கும் பாடல்களை அவர்கள் விரும்புபவர்களுக்கு அர்ப்பணித்து ஒளிபரப்புகின்றனர்.

Hi Tunes is a back to back Channel UFX
 

களவாணி ரேஞ்சுக்கு இந்த சண்டி வீரன் இருப்பான்! - இயக்குநர் சற்குணம்

அதர்வா நடிப்பில் தான் இயக்கி வரும் சண்டி வீரன் படம், களவாணி மாதிரி விறுவிறுப்பாகவும் நகைச்சுவை கலந்தும் இருக்கும் என்றார் இயக்குநர் சற்குணம்.

அதர்வா ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாலா தயாரித்திருக்கிறார். ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Director Sargunam speaks about his Sandi Veeran

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதர்வா, கயல் ஆனந்தி, இயக்குநர் சற்குணம், ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இயக்குநர் பேசுகையில், ‘நான் இயக்கிய ‘வாகைச்சூடவா', ‘களவாணி' ஆகிய படங்களின் வரிசையில் ‘சண்டி வீரன்' படம் இருக்கும். ஆனால் அந்தப் படங்களின் சாயல் துளியும் இருக்காது.

அடுத்தடுத்து விறுவிறுப்பான சம்பவங்கள் கொண்ட திரைக்கதை இது. அனைவரும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு படமாக உருவாக்கியிருக்கிறேன். இப்படத்தில் கேரள நடிகர் லால் மில்லுக்காரர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதலில் நான் பாலாவிடம் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டு நல்லா இருக்கு என்று சொன்னார். பின்னர் கதாநாயகனாக அதர்வாவை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். நல்லது என்று கூறி இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார். கயல் படத்தை பார்த்து ஆனந்தியை தேர்வு செய்தேன்.

இது கிராமத்துக் கதை. எந்த வகையில் சாதிச் சாயம் இல்லாமல் உருவாக்கியிருக்கிறேன்," என்றார்.

 

ரஜினியிடமிருந்து அழைப்பு... அதிர்ந்த மலையாளப் பட இயக்குநர்!

பொதுவாகவே தமிழ் திரைத்துறையில் இருக்கும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு ரஜினியுடன் இணையும் ஆர்வம் ஏகத்துக்கும் உண்டு. அவரிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருப்பார்கள்.

அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டே படங்கள் இயக்கி, வளரும் இயக்குநராக இருந்த ரஞ்சித், ரஜினியிடமிருந்த வந்த ஒரு அழைப்பில் இன்று முதல் நிலை இயக்குநராகிவிட்டார்.

Alphones Puthiran gets a call from Rajini, But...

இதேபோன்ற ஒரு அழைப்பு, இன்னொரு வளரும் இயக்குநருக்கு ரஜினியிடமிருந்து வந்தது. ஆனால் அவரோ ரஜினியைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறார் இன்னமும்.

இந்த இயக்குநரின் பெயர் அல்போன்ஸ் புத்திரன். கேரளாவின் சென்சேஷனல் இயக்குநர். பிரேமம் படத்தை இயக்கியவர்.

தமிழில் இவர் இயக்கிய படம்தான் நேரம்.

பிரேமம் படம் பார்த்த ரஜினிகாந்த், அல்போன்ஸ் புத்திரனிடம் கதை கேட்க அழைப்பு விடுத்துள்ளார். அதிர்ந்து போன அல்போன்ஸ், "ரஜினி மிகப் பெரிய நடிகர். அவருக்கு படம் பண்ணும் அளவுக்கு என் அனுபவமில்லை. அவ்வளவு பட்ஜெட்டை கையாளும் திறன் எனக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எனவேதான் அவரைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற ஒரு சாதனையாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததே மிகப் பெரிய அங்கீகாரம்தான்," என்கிறார்.

 

வீட்டிலேயே இறைவனை தரிசிக்க தினமொரு திவ்ய தேசம்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "தினமொரு திவ்ய தேசம்". இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

கோவிலுக்கு செல்வது வழக்கத்தில் இருந்தாலும் பலர் தாங்கள் அன்றாடம் செல்லும் அக்கோவிலின் வரலாறு மற்றும் அதன் பெருமை பற்றி அறிந்திருக்க மாட்டர். ஆனால் அது பற்றிய விவரங்களை அறியும்போது அவர்கள் கோவிலுக்கு செல்வதன் காரணத்தையும் உணர்கிண்றனர். ஒரு சிரிய ஊரிலுள்ள கோவிலுக்குக் கூட அதற்கென்ற தனிச்சிறப்பும் வரலாறும் உண்டு.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

எடுத்துக்காட்டாக நைமிஷாரண்யம் என்ற க்ஷேத்திரத்தை எடுத்துக்கொண்டால் "நைமி" என்ற சொல்லுக்கு வடமொழியில் வட்டம் என்று பொருள். அதாவது தேவர்கள் யாகம் நடத்த உகந்த இடம் எது என்று பிரம்மனிடம் கேட்டபோது பரம்மன் தனது வட்டமான மோதிரத்தை கழற்றி பூமியில் வீச அம்மோதிரம் விழுந்த இடமே "நைமிக்ஷாரண்யம்" என்னும் க்ஷேத்திரமாகும். விஷ்ணு தனது சுதர்ஷன சக்கரத்தால் அரக்கர்களை கொன்ற இடமும் இந்த நைமிக்ஷாரண்யமாகும் என மற்றொரு வரலாறும் உள்ளது.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

இது போன்ற பல அரிய தகவல்களை நேயர்களுக்கு வழங்கும் முயற்சியில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் "தினமொரு திவ்ய தேசம்". ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சார் அவர்களின் சொற்பொழிவுடன் கூடிய இந்நிகழ்ச்சியில் தென் இந்தியாவின் பல கோவில்களின் பெருமைகளை நேயர்கள் அறியலாம். ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

பிரபு தேவா ஸ்டுடியோஸ்... தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார் பிரபு தேவா!

நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற பிரபு தேவா அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரபு தேவா ஸ்டுடியோஸ் என பெயர் வைத்துள்ளார்.

இந்த பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தாங்கள் தயாரிக்கவிருக்கும் படங்களை பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதி முறைப்படி அறிவிக்க உள்ளது.

Prabhu Deva enters Film Production in style

இதுகுறித்து பிரபு தேவா கூறுகையில், "சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்' தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள்,படைப்பாளிகள் மொழி, பிராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது. அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளி காட்ட வேண்டும்.

நல்ல படைப்பாளிகளைத் தேர்ந்து எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்வதில் முனைப்பாக செயல்படும் 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்," என்றார்.

 

என் திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?: டாப்ஸி

சென்னை: டாப்ஸிக்கு தனது திருமணம் சப்தமில்லாமல் அமைதியாக தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடக்க வேண்டும் என்று ஆசையாம்.

டாப்ஸி தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் அவர் நடித்துள்ள ரன்னிங் ஷாதி.காம் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்த படத்தில் நடிக்கையில் டாப்ஸிக்கு திருமண வேலைகளை செய்து கொடுக்கும் நிறுவனத்தை துவங்கும் எண்ணம் ஏற்பட்டது.

Taapsee wants to have a low key wedding

இதையடுத்து தனது தங்கை ஷகுன் மற்றும் தோழி ஃபராவுடன் சேர்ந்து திருமண வேலைகள் செய்யும் நிறுவனத்தை துவங்கியுள்ளார். இந்நிலையில் திருமணம் பற்றி டாப்ஸி கூறுகையில்,

சில திரையுலக பிரபலங்கள் ஏன் ரசிகர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது எனக்கு புரிகிறது. எப்பொழுது பார்த்தாலும் பிரைவஸி இல்லாமல் இருப்பதால் திருமணமாவது தங்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில ஆண்டுகள் கழித்து நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால் ஊர், உலகத்திற்கு எல்லாம் தெரிவிக்காமல் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் தான் அது நடக்கும் என்றார்.

டாப்ஸி டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவை காதலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி - ரஞ்சித் படத்தில் அட்டகத்தி தினேஷ்... உறுதி செய்த இயக்குநர்!

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில், தனது முதல் படமான அட்டகத்தியில் நடித்த தினேஷுக்கு ஒரு முக்கிய வேடம் உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் ரஞ்சித்.

லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் இந்தப் புதிய படத்துக்கான தொழில்நுட்பக் குழு, நடிகர்கள் அனைவருமே இயக்குநர் ரஞ்சித்தின் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரஜினி படங்களில் வழக்கமாக இடம்பெறும் யாரும் இந்தப் படத்தில் இல்லை.

Attakathi Dinesh in Rajini - Ranjith movie

படத்தில் ரஜினியுடன் நாயகியாக ராதிகா ஆப்தே நடிப்பார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

அடுத்து அட்டகத்தி படத்தில் நடித்த தினேஷும் இந்தப் படத்தில் நடிப்பார் என்று செய்தி வெளியானது. இதனை இயக்குநர் ரஞ்சித்தும் உறுதி செய்துள்ளார். ஒரு முக்கியமான வேடத்தில் தினேஷ் நடிப்பது உண்மைதான் என்றும், ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஆர்யா, சந்தானம் நடித்த விஎஸ்ஓபிக்கு யு சான்றிதழ்!

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (விஎஸ்ஓபி) படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

U certificate for VSOP

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

U certificate for VSOP

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 14-ம்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

U certificate for VSOP

‘யு' சான்றிதழ் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "வி.எஸ்.ஓ.பி. படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று இப்படமும் முழுக்க முழுக்க காமெடியாக, குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும்," என்றார்.

 

பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகை பரவை முனியம்மாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பிரபல நடிகையான பரவை முனியம்மா கடைசியாகத சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே படத்தில் பாட்டுப் பாடி நடித்திருந்தார்.

Sivakarthikeyan visits Paravai Muniyamma

அதன் பிறகு பரவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. வருமானமும் இல்லை. முதுமை காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட, மருத்துவமனையில் கஷ்டப்பட்டு வந்தார். மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் அவர் அவதிப்பட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட, இப்போது அவருக்கு உதவிகள் வர ஆரம்பித்துள்ளன.

முதல் கட்டமாக நடிகர் விஷால், ரூ 5000 முன்பணமும், மாதாமாதம் அதே தொகையை வழங்கப் போவதாகவும் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து தனுஷ் பரவை முனியம்மாவுக்கு ரூபாய் 5 லட்சம் பண உதவியும் வழங்கியிருக்கிறார்.

நேற்று பரவை முனியம்மா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார் நடிகர் சிவகார்த்திகேயன். பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் பரவை முனியம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். பண உதவி செய்தாரா என்ற விவரம் வெளியாகவில்லை.

 

நடிகர் வினுசக்கரவர்த்தி நிலைமை கவலைக்கிடம்- நினைவை முற்றிலும் இழந்தார்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரும் இயக்குனருமான, நடிகர் வினுசக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 1௦௦௦ படங்களுக்கும் மேல் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டவர் வினுசக்கரவர்த்தி.

நேற்று திடீரென்று ரத்த அழுத்தமும் சர்க்கரையும் ஒருசேர அதிகமானதில் வினுசக்கரவர்த்தி மயங்கி விழுந்தார், உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Actor Vinuchakravarthy Admitted in Hospital

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வினுசக்கரவர்த்தி நினைவை முற்றிலும் இழந்து விட்டதாகவும், மேலும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாகவே நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாலா கூப்பிட்டார்.. கதை கூட கேக்கல.. சண்டி வீரனாயிட்டேன்! - அதர்வா

அதர்வாவின் கேரியரைப் பொருத்தவரை, பாலாவின் பரதேசிக்கு முன்; பரதேசிக்குப் பின் என்ற நிலைதான்.

Why Atharva accepts Sandi Veeran?

அதுவரை படங்களில் ஹீரோ என்ற பெயரில் சும்மா வந்து போய்க் கொண்டிருந்தவரை, பண்பட்ட நடிகராக்கினார் பாலா.

இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். அந்த நன்றிக்கடனை ஏகத்துக்கும் மனசில் வைத்திருக்கும் அதர்வா, பாலா கூப்பிட்டதுமே ஒப்புக் கொண்ட படம் சண்டி வீரன்.

Why Atharva accepts Sandi Veeran?

களவாணி புகழ் சற்குணம் இயக்கும் இந்தப் படம் குறித்து அதர்வா நம்மிடம் பேசுகையில், "எனக்கு இயக்குனர் பாலா போன் செய்து உடனே வரச் சொல்லி அழைத்தார். உடனே போய்விட்டேன். 'கதை ஒன்று கேட்டேன். அதில் நீ நடிக்க வேண்டும்' என்று கூறினார். நான் என்ன கதை, யார் இயக்குநர் என்று கூடக் கேட்கவில்லை. உடனே ஓகே சொன்னேன்.

அதன் பிறகுதான் தெரியும், இயக்குநர் சற்குணம் என்பது. ‘களவாணி' படத்தை பார்த்ததிலிருந்தே சற்குணம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது ரொம்ப புதிய அனுபவமாக இருந்தது" என்றார்.

Why Atharva accepts Sandi Veeran?

இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடி கயல் ஆனந்தி. அவர் கூறுகையில், "நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது," என்றார்.

‘சண்டி வீரன்' படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வருகிறது.

 

விஎஸ்ஓபின்னா....? மாமனாரைப் போட்டுக் கொடுத்த இமான்!

இசையமைப்பாளர் இமானுக்கு தன் மாமனார் மீது அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை. விஎஸ்ஓபி படத்தின் பிரஸ் மீட்டில் ஒரு அந்தரங்கத்தை அம்பலப்படுத்திவிட்டார்.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... இந்தத் தலைப்பை சுருக்கமாக விஎஸ்ஓபி என்று கூறி வருகிறார்கள் படக்குழுவினர். மீடியாவும் அதையே எழுதி வருகிறது.

Music director Imman doesn't know the meaning for VSOP!

இயக்குநர் ராஜேஷ் முதல் முதலில் இந்தத் தலைப்பை இசையமைப்பாளர் இமானிடம் சொன்னபோது, அவருக்கு தலைப்பின் அர்த்தம் புரியவில்லையாம். இருந்தாலும் கேட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம், இசையமைக்க.

உடனே தன் தந்தையிடம் போய், விஎஸ்ஓபின்னா என்னப்பா என்று கேட்டாராம். தந்தையும் தெரியவில்லை என்று கூறிவிட்டாராம்.

பின்னர் மனைவியிடம் இந்தத் தலைப்பைக் கூறினாராம். அட.. இப்படிக்கூடவா தலைப்பு வைப்பாங்க என்றாராம். அப்படின்னா அர்த்தம் தெரியுமா என்று கேட்டதும், இது சரக்கு சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்பதைப் புரிய வைத்தாராம்.

"என் மாமனார் அவ்வப்போது சரக்கடிப்பார். அவருக்கு இது பழக்கம் என்பதால், என் மனைவிக்குத் தெரியும்!" என மேடையிலேயே இமான் கூற, அரங்கம் சிரிப்பலையில் மிதந்தது.

கூடவே, 'என்ன இருந்தாலும் இமான் இப்படியா சொல்வார்.. மாமனார் மேல என்ன கடுப்போ?' என்ற ஜாலி கமெண்டுகளும்!

 

சினிமாவில் அரிதாரம் பூச ஆசைப்படும் நடன நடிகை

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல சினிமா, சீரியல், டாக் ஷோ என்று பிரபலமாக இருக்கும் அந்த மாஜி நடன நடிகைக்கு சினிமாவின் மீதுதான் ஆசை அதிகமாம். எனவேதான் மீண்டும் சினிமாவில் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, குணசித்திர வேடங்களில் நடித்தவர் அந்த நடிகை, வடமாநிலங்களில் செட்டிலானாலும் சென்னைக்கு பறந்து வந்து சீரியலில் நடித்து விட்டு போகிறார். மாமியார் கதாபாத்திரம்தான் என்றாலும் வடநாட்டு ஸ்டைல் உடை, மேக்அப் என அசத்தும் அந்த நடிகைக்கு இல்லத்தரசிகள் ரசிகைகளாக மாறி உள்ளனர்.

Mother actress wants to act again

சீரியலில் கிடைத்த புகழினால் பிரபல டிவி சேனலில் பஞ்சாயத்து பண்ணும் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார் அந்த மயில் நடிகை. ஏற்கனவே பஞ்சாயத்து செய்தவர் சினிமாவில் பிரபலமாகி வருவதால், மாமியாரான மயில் நடிகைக்கும் சினிமா ஆசை மீண்டும் துளிர்த்து வருகிறதாம் எனவே நல்ல கதையாக இருந்தா சொல்லுங்கப்பா என்று பிரபல இயக்குநர்களுக்கு தூது விட்டு வருகிறாராம்.

அவர் காலகட்டத்து நடிகைகள் இன்னமும் சினிமாவில் பிரபலமாக நடித்து வருவதே மயில் நடிகைக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளதாம்.

அப்போ தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அம்மா நடிகை ரெடி

 

சூர்யாவுடன் இணையும் நித்யா மேனன்

சென்னை: யாவரும் நலம் என்ற திகில் படத்தைக் கொடுத்த இயக்குநர் விக்ரம் குமார் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 24 என்ற த்ரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.

அஞ்சான் மற்றும் மாஸ் என அடுத்தடுத்து 2 மாபெரும் தோல்விப் படங்களைக் கொடுத்த நடிகர் சூர்யா, அடுத்து வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தப் படத்தில் தீவிரமாக உழைத்து வருகிறார்.

Nitya Menen to romance Suriya in 24

முதல்முறையாக நடிகர் சூர்யா த்ரில்லர் கதையில் நடிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார், இந்நிலையில் நடிகை நித்யாமேனனும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது 24 படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நித்யாமேனன், ஒரு முக்கியமான வேடத்தில் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறுகின்றனர்.

கால இயந்திரத்தைப் பற்றிய கதையாக உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடித்து வருகிறார், அப்படியென்றால் 2 சூர்யாக்களில் ஒரு சூர்யாவிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை.

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார், தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகி வருகிறது 24.

 

ஒவ்வொரு மாணவரும் அப்துல்கலாமாக மாற வேண்டும்- வடிவேலு

சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் இன்று பகல் 11 மணிக்கு மேல் அவரின் சொந்த மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது, லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தலைவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் மக்களின் ஜனாதிபதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர், நடிகர்களில் விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் வடிவேலு ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Each Student Must be Abdulkalam - Vadivelu

அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு அப்துல்கலாமைப் பற்றி பேசினார் " உலகத்தின் அனைத்து வல்லரசு நாடுகளையும், சர்வசாதாரணமாக பெயர் வைக்கப்படாத வல்லரசு நாடு இந்தியா என பீதியைக் கிளப்பி, இந்தியாவை தலைநிமிரச் செய்து தமிழன். அனைவருக்கும் பெருமையைச் சேர்த்த தமிழ் தங்கம் ஒரு மாபெரும் விஞ்ஞானி, இளைஞர்களுக்கேல்லாம் அவர் ஒரு கல்வி விளக்கு.

ஐயா ,அப்துல்கலாம் பிரிந்த நாள் நமக்கெல்லாம் ஒரு கருப்பு தினம். இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது உறவுக்காரர் இறந்தது போல் உணர்கிறேன் நான், அவர் நம்மை விட்டு பிரிந்தது மிகப்பெரிய வேதனை.

அவர்போலவே ஒவ்வொரு இளைஞர்களும், மாணவர்களும் ஒவ்வொரு அப்துல் கலாமாக மாறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

 

பேச்சுவார்த்தையில் உடன்பாடு... நாளை முதல் மீண்டும் படப்பிடிப்பு

பெப்சி அமைப்புடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்தால், நாளை முதல் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (பெப்சி) இணைந்துள்ள தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக, தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இக்கோரிக்கைகள் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

FEFSI issue solved: Shooting resumes from Friday

இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் வரையில் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்தது. அதன்படி, 27-ம்தேதி முதல் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், பெப்சி நிர்வாகிகளுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்குமிடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்பளப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றதால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற யூனியன்கள் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தாலும், சண்டைப் பயிற்சியாளர்களுக்கான சம்பள உயர்வு விஷயத்தில் இன்றும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதையும் முடித்து வைக்க முயற்சி தொடர்கிறது.

 

இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்- ட்விட்டரில் நெகிழ்ந்த சிம்பு

சென்னை: வாலு படம் பலமுறை தள்ளிப் போனதில் சிம்புவும் அவரது ரசிகர்களும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பலரும் வாலு படம் தள்ளிப் போனதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வந்தனர்.

Simbu Says

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் படம் வெளியே வரவில்லை, இந்நிலையில் வாலு படம் வெளியாக வேண்டி நடிகர் விஜய் அந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பண உதவி செய்தார் என்று செய்திகள் வெளியாகின.

தற்போது இதனை உறுதி செய்யும் விதத்தில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். " வாலு படம் வெளியாக உதவி புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி, இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர்" விஜய் அண்ணா என்று நெகிழ்ந்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் "நீங்கள் பெருமைப் படும்படி கண்டிப்பாக செய்வேன் என நம்புங்கள், நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என்று தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

தற்போது இந்த ட்வீட்களின் மூலம்விஜய் உதவி செய்தது உறுதியாகி விட்டது, மேலும் சிம்பு ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்து விட்டது.

இதனால் சிம்பு ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் உங்கள் அபிமானத் திரையரங்குகளில் வாலு விரைவில் வெளியாகும்...

 

அனுஷ்கா போன்றே ட்விட்டரில் கலாம் பெயரை தவறாக எழுதிய நடிகர்: ஆனால் 'எஸ்கேப்'

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா போன்றே இந்தி நடிகர் பர்ஹான் அக்தரும் அப்துல் கலாமின் பெயரை ட்விட்டரில் தவறாக போட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவு செய்தியை அறிந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்தார். அப்போது அவர் கலாமின் பெயரை ஏபிஜெ அப்துல் கலாம் ஆசாத் என்று தவறாக தெரிவித்திருந்தார். இதை பார்த்தவர்கள் அவரை ட்விட்டரில் கிண்டல் செய்தனர். உடனே அவர் தனது ட்வீட்டில் இருந்து ஆசாத்தை நீக்கிவிட்டார்.

Not just Anushka: Farhan Akhtar too mixed up APJ Abdul Kalam's name on Twitter

அனுஷ்கா மட்டும் அல்ல பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தரும் ட்விட்டரில் கலாமின் பெயரை ஏபிஜெ அப்துல் கலாம் ஆசாத் என்று தவறுதலாக தான் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையே மக்கள் அனுஷ்காவை கிண்டல் செய்வதை பார்த்த பர்ஹான் தனது ட்வீட்டில் திருத்தம் செய்து அப்துல் கலாம் என்று பெயரை மாற்றிவிட்டார். நல்லவேளை நான் சிக்கவில்லை என்று மனிதர் நிம்மதி பெருமூச்சுவிட்டிருப்பார்.

அனுஷ்கா தனது தவறை ஒப்புக் கொண்டதுடன் தன்னை யார் கிண்டல் செய்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

"வா நண்பா வா கனவு காணலாம்" அப்துல்கலாமிற்கு பாடல் பாடி இணையத்தில் வெளியிட்ட நடிகர்

சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமலஹாசன், இயக்குநர் டி.ராஜேந்தர் ஆகியோர் கவிதை வடிவில் இரங்கற்பா எழுதி வெளியிட்டனர்.

தற்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகர் அசோக். தமிழ் சினிமாவில்வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் அப்துல்கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகளை எடுத்துக் கொண்டு, வா நண்பா வா கனவு காணலாம் என்ற பாடலை எழுதி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பாடலின் ஆரம்ப வரிகள் தொடங்கி இறுதி வரை உற்சாகத்தை அள்ளித் தெளிக்கும் வரிகளுடன் பாடி அசத்தி இருக்கிறார் அசோக், யூ.கே.முரளியின் இசைக்கு வரிகள் எழுதி இருக்கிறார் கவிஞர் ஜோதிபாசு.

3 மணிநேரத்தில் பாடலை எழுதி பாடி இசை அமைத்து இருக்கின்றனர், ஆரம்பம் தொடங்கி இறுதிவரை கலாம் கலாம் என முடியும் இந்தப் பாடலை அப்துல்கலாமிற்கு அர்ப்பணித்து இருக்கின்றார் நடிகர் அசோக்.

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அசோக்...

 

பரவை முனியம்மாவுக்கு தனுஷ் ரூ 5 லட்சம் உதவி

உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நாட்டுப் புறக் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மாவுக்கு நடிகர் தனுஷ் ரூ 5 லட்சம் உதவி செய்துள்ளார்.

Dhanush helps Rs 5 lakhs to Paravai Muniyamma

பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் அவதிப்படுவது குறித்து குமுதம் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதைப் படித்த நடிகர் விஷால் உடனடியாக ரூ 5 ஆயிரம் கொடுத்ததோடு, மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்காக மாதம் ரூ 5 ஆயிரம் தொடர்ந்து தருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ 5 லட்சத்தை பரவை முனியமாமாவுக்கு அளித்து உதவி செய்துள்ளார்.பரவை முனியம்மாவின் இப்போதைய குடும்ப சூழலில் இந்தத் தொகை ஒரு மிகப் பெரிய உதவியாக அமைந்துள்ளது.

 

சீன, ஆங்கில மொழிகளிலும் வெளியாகிறது பாகுபலி

தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாகவும், இந்தி, மலையாளத்தில் டப் செய்யப்பட்டும் வெளியாகி, வசூலில் புதிய சாதனைப் படைத்து வரும் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்தை அடுத்து, சீன மற்றும் ஆங்கில மொழிகளில் டப் செய்து சீனா உள்ளிட்ட நாடுகளில் வெளியிடவிருக்கின்றனர்.

பாகுபலி படம் இதுவரை ரூ 500 கோடிக்கு மேல் குவித்து வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது.

Bahubali to be dubbed in Chinese and English

இன்னும் கூட தமிழகத்திலும் இந்தியாவின் பிற பாகங்களிலும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாகுபலியின் ஆதிக்கம் தொடர்கிறது.

இந்தப் படத்துக்கு வெளிநாடுகளில் கிடைத்துள்ள பேராதரவைக் கண்ட ராஜமவுலி, சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் டப் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்.

இந்த டப்பிங் வடிவம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்றும் சில காட்சிகளை இன்னும் ட்ரிம் பண்ணப் போவதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாகுபலியின் புதிய பதிப்பை 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப் போவதாக அவர் தெரவித்துள்ளார்.

 

கலாமின் எளிமையை பின்பற்றி வருகிறேன்: சிவகார்த்திகேயன்

ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் எளிமை மற்றும் அவரது கொள்கைகளைப் பின்பற்றி வருவதாக நடிகர் சிவகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்களால் மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட அப்துல் கலாம், கடந்த 27ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

Actor Sivakarthikeyan paid tribute to Kalam

அவரது திடீர் மரணம் இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அப்துல்கலாமின் உடலுக்கு மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திக்கேயனும் ராமேஸ்வரம் சென்று கலாமுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-

அப்துல்கலாமின் எளிமை மற்றும் கொள்கையை பின்பற்றி வருகிறேன். பள்ளி,கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் இங்கு கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். அவரது கனவை நினைவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்' என்றார்.

 

கலாமிற்கு அஞ்சலி: வாலியின் வரிகளில்…

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

காமராஜர் படத்திற்காக வாலி எழுதி இளையராஜா இசையமைத்த பாடல் அப்துல் கலாமிற்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ
உழைத்தது போதுமென்று உறங்குகிறாயோ
ஊராருக்கு அழுதவனே உறங்குகிறாயோ
ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ

Lyricist Vaali’s line for Abdul kalam

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானடா

மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா
ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானட

இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே
திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா
தனை பெற்ற தாயை விட பிறந்த நாடு தான் பெரிது என்பானடா
ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரை தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

 

வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டியிடுகிறது வெற்றிமாறனின் "விசாரணை"

சென்னை: தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விசாரணை, லாக்-அப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் விரைவில் திரையைத் தொடவிருக்கிறது.

அட்டக்கத்தி தினேஷ் சமுத்திரக்கனி, கிஷோர் மற்றும் முருகதாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது காவல்துறை பிரயோகிக்கும் அராஜகங்களைப் பற்றி பேசும் படமாக விசாரணை உருவாகி இருக்கிறது.

Vetrimaran's Visaranai to Compete in Venice Film Festival

சர்வதேச இயக்குநர்களின் படங்கள் கலந்து கொண்டு போட்டியிடும் வெனிஸ் திரைப்பட விழாவில், இயக்குநர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படமும் கலந்து கொள்கின்றது. தமிழ் திரைப்படம் ஒன்று வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை, அந்தப் பெருமையை இயக்குநர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் தட்டிச் செல்கிறது.

இந்த மகிழ்ச்சியான அனுபவம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறும்போது "72 வருட பாரம்பரியமிக்க வெனிஸ் திரைப்பட விழாவின் வரலாற்றில் ஒரு தமிழ்ப்படம் திரையிடப்படுவது இதுவே முதல்முறை" என்று மகிழ்ந்து உள்ளார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார், விசாரணை படத்தைத் தயாரித்து இருக்கிறார் நடிகர் தனுஷ்.

 

பல வருடங்களுக்குப் பின் மீண்டு வரும் காதலி- இது என்ன மாயம்

சென்னை: கும்கி திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வெள்ளக்கார துரை படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை, தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

அறிமுக நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு படத்தைப் பற்றி கூறும்போது "என்னுடன் இதுவரை நடித்த நடிகைகளில் நடிகை லட்சுமி மேனனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

Ithu Enna Mayam Movie

வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறேன். இது என்ன மாயம் திரைப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

காதல் + காமெடி என்று எல்லாம் கலந்த கலவையாக இது என்ன மாயம் திரைப்படம் இருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயல்பாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அதனையே படத்திலும் கொண்டு வந்திருக்கிறார்.

மொத்தத்தில் இது என்ன மாயம் திரைப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் " என்று கூறியிருக்கிறார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் பல வருடங்களுக்குப்பின் அவனது காதலி மீண்டும் வந்தால், எப்படி இருக்கும் என்பதுதான் இது என்ன மாயம் படத்தின் கதையாம்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.

 

என்னை கிண்டல் செய்த கோழைகள் தில் இருந்தா என் முன்னாடி வாங்க பார்ப்போம்: நடிகை அனுஷ்கா

மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை ட்விட்டரில் தவறாக குறிப்பிட்டதற்காக யார் தன்னை கிண்டல் செய்தாலும் கவலை இல்லை என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் கலாமின் பெயரை ஏபிஜெ அப்துல் கலாம் ஆசாத் என்று தவறுதலாக குறிப்பிட்டிருந்தார்.

Anushka Sharma Says Tweet With Error in Dr Kalam's Name Was 'Honest Mistake'

இதை பார்த்த மக்கள் கலாம் பெயரை எப்படி தவறாக எழுதலாம் என்று கூறி ட்விட்டரில் அனுஷ்காவை கிண்டல் செய்தனர். இதையடுத்து அனுஷ்கா தனது ட்வீட்டில் ஆசாத் என்ற பெயரை நீக்கினார்.

இந்நிலையில் இது குறித்து அனுஷ்கா மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அது தெரியாமல் நடந்த தவறு. என்னை கிண்டல் செய்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் நோக்கம் சரியானது. கம்ப்யூட்டருக்கு பின்னால் அமர்ந்து கமெண்ட் போடுபவர்கள் கோழைகள், முகம் தெரியாதவர்கள். எங்கே அவர்கள் என் முகத்திற்கு எதிராக கிண்டல் செய்யட்டும் பார்க்கலாம் என்றார்.

 

நீங்க கூட காமெடி சூப்பர் ஸ்டார்னு போட்டீங்களாமே! - சந்தானத்தை கலாய்த்த ரஜினி

சில ஆண்டுகளுக்கு முன் சேட்டை என்று ஒரு படம் வந்தது. அதில் சந்தானத்துக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என டைட்டிலில் போட, அது பற்றி சந்தானத்திடமே ரஜினி ஜாலியாக விசாரித்திருக்கிறார். இதனை சந்தானமே நேற்று தெரிவித்தார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.

Are you Comedy superstar? Rajini asks Santhanam

இப்படத்தின் இசை வெளியீடு புதன்கிழமை மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் சந்தானம் பேசுகையில், "கல்லூரியின் கதை படத்தில் ஆர்யா என்னுடன் நடிக்கும் போது, நானும் அவரும் கொஞ்சம் நட்பா இருப்போம். அப்போ பெங்களூரிலிருந்து மாடல்ஸ் வந்திருந்தாங்க. அப்போ நீங்க யாருனு கேட்கவும் நான் தான் காமெடி சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டேன். இதை ஆர்யா கவனிச்சு எல்லோரிடமும் போட்டுக் கொடுத்துவிட்டார். அப்போ இருந்தே இன்னும் அதிக நட்பா பழக ஆரம்பித்துவிட்டோம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பழைய சம்பவத்தை நினைவில் வைத்து, டைட்டிலில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்றே டைட்டிலில் பெயரை போட்டுவிட்டார். அந்த அளவுக்கு எனக்கும் ஆர்யாவுக்கும் நட்பிருக்கிறது.

நான் லிங்கா படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது, சூப்பர் ஸ்டார் பட்டத்தை இப்போ யார்யாரோ போட்டுக்குறாங்க என்று பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி என்னைப் பார்த்து 'நீங்க கூட காமெடி சூப்பர் ஸ்டார்னு போட்டீங்களாமே' அப்டினு கேட்கவும் ஷாக் ஆயிட்டேன். உடனே சார் அது ஆர்யா டைட்டிலில் போட்டுட்டாரு என்றேன்.

தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துலதான் ஹீரோவுக்கு இணையா காமெடியன் போட்டோவும் விளம்பரத்தில் போட்டார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு ஆர்யாவும் ஓகே சொன்னாரு. அந்த நிகழ்வுதான் நான் ஹீரோவா நடிக்கிறதுக்கு காரணமாகவும் தூண்டுதலாகவும் இருந்தது.

அவர் என்னை பயன்படுத்திக் கொள்வதும், நான் அவரை பயன்படுத்திக் கொள்வதையும் தாண்டி எங்களுக்குள் ஆத்மார்த்தமான நட்பிருக்கிறது. அதுமட்டும் தான் எங்களின் வளர்ச்சிக்கும் காரணம். ஆர்யா இந்தப் படத்தோட ஹீரோ மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. இது வரைக்கும் படத்துக்காக செலவு தான் பண்ணிட்டு இருக்காரு. ஆனா வரவு வரவில்லை. அதனால இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள். நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும். சீக்கிரம் வந்துவிடுகிறோம்," என்றார்.

 

எம்எஸ்விஸ்வநாதன் உருவப் படம்!- இளையராஜா திறந்து வைக்கிறார்

திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கலையரங்கில் அமரர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் உருவப் படத்தை இளையராஜா திறந்து வைக்கிறார். இசையமைப்பாளர்கள் சங்கம் இதனை இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

திரைப்பட இசை கலைஞர்கள் சார்பாக மறைந்த இசை மேதை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்துவதாக எங்களது திரைப்பட இசை கலைஞர்கள் மற்றும் அறக்கட்டளை சார்பாக முடிவு எடுக்கப்பட்டது.

Ilaiyaraaja to open portrait of MSV

வரும் ஆகஸ்ட் 02 ஆம் தேதி ஞாயிறு மாலை 6.00 மணிக்கு வடபழனி, என்எஸ்கே சாலையில் அமைந்துள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

எங்களது இந்த உணர்வு மிகு நிகழ்ச்சியில் இசை ஞானி இளையராஜா முன்னிலை வகித்து எம்.எஸ்.விஸ்வநாதனின் உருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறார்.

எங்களின் அமைப்பைச் சேர்ந்த அனைத்து இசை அமைப்பாளர்களும், பிரபல பாடக, பாடகியரும், இசைக் கலைஞர்களும் இதில் பங்கேற்கிறார்கள். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும், மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளனர்.

 

பாயும் புலின்னா என்னன்னு தெரியுமா?

சென்னை: பாண்டியநாடு திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் சுசீந்திரனும் நடிகர் விஷாலும் 2 வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் பாயும்புலி. பாண்டியநாடு திரைப்படம் அடைந்த மாபெரும் வெற்றி காரணமாக இந்தப் படம் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

நடிகர் விஷாலிற்கு ஜோடியாக நடிகை காஜல் நடிக்கும் இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம் விஷால். மதுரையைப் பின்னணியாகக் கொண்ட போலீஸ் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

Paayum Puli Movie Story

ஒருவன் யாரை வேண்டுமானாலும் கொலை செய்துவிட்டு தப்பித்து விடலாம் ஆனால் ஒரு போலீசைக் கொலை செய்து விட்டு சட்டத்திடம் இருந்து தப்ப முடியாது என்பதே பாயும் புலி படத்தின் கதை.

பாயும் புலி என்ற பெயரில் ஏற்கனவே ரஜினியின் திரைப்படம் ஒன்று வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது , ரஜினியின் மேல் அப்படி என்ன காதலோ தெரியவில்லை தொடர்ந்து தனது படங்களில் ரஜினியின் தலைப்புகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இதுவரை சுசீந்திரன் இயக்கியிருக்கும் படங்களின் எண்ணிக்கை மொத்தம் 8, இதில் 3 (பாயும் புலியையும் சேர்த்து) ரஜினியின் படத்தலைப்புகள் தான்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் சூரியின் காமெடி, காஜலின் கெமிஸ்ட்ரி ஆகியவை நன்றாக வந்திருப்பதாக சொல்கிறார்கள். காதல், காமெடி, ஆக்க்ஷன், செண்டிமெண்ட் என எல்லாம் சேர்ந்த கலவையாக படம் இருக்கும் என்று படத்திற்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

பாயும் புலியா? பாயாத புலியான்னு? படம் வந்தாத்தானே தெரியும்...

 

ஆபத்தான கார், பைக் சேசிங் காட்சிகளுக்கு டூப் போடாத டாம் க்ருஸ்!

டாம் க்ருஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் ‘மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம்' (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.

அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென பெரும் ரசிகர்க்ளைக் கொண்ட மிஷன் இம்பாசிபிள் தொடரின் இந்த பாகத்தில் ரசிகர்களுக்கு மேலும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

M3 the signature car for Mission Impossible : Rouge Nation

படத்தின் மோட்டார் ஸ்டன்ட் பயிற்சியாளர் வேட் ஈஸ்ட்வுட், "எத்தகைய ஸ்டண்ட் காட்சியையையும் ஒரு படி மேல் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவர் டாம் க்ரூஸ். ‘முரட்டு தேசம்' படத்தில் வரும் டாம் க்ரூசின் ரேஸ் கார் மற்றும் பைக் சேசிங் காட்சிகளை வேறெந்த சாகச வீரரையும் வைத்து டூப் போடாமல் பல நாள் பயிற்சிக்கு பின் தானே மேற்கொண்டுள்ளார். BMW நிறுவனத்தின் M3 காரின் உறுதியும், திறமும் டாம் க்ரூஸின் ஆபத்து நிறைந்த கார் சேசிங் காட்சிகளுக்கு பேருதவியாய் இருந்தது," என்கிறார்.

M3 the signature car for Mission Impossible : Rouge Nation

"சுட்டெரிக்கும் வெயில் முதல் தேள்கடி என கடினமான சூழ் நிலைகளில் மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம் படத்தை படமாக்கியுள்ளோம். பற்பல தெருக்களின் குறுகிய வளைவுகளிலும் இருக்கும் சேசிங்கும் அதை தொடர்ந்து வானுயர் கட்டிடங்களின் இடையே சீரி செல்லும் ஹெலிகாப்டர் சீனும் ரசிகர்களை பரபரக்க வைக்கும்," எனக் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

 

கர்நாடகத்தில் மட்டும் ரூ 50 கோடியை குவித்த பாகுபலி.. இதுவும் புதிய சாதனைதான்!

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் கர்நாடகத்தில் மட்டும் ரூ 50 கோடிக்கு மேல் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன் வேறு எந்தப் படமும் கர்நாடகத்தில் இவ்வளவு வசூலை எட்டியதே இல்லை.

பாகுபலி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடிப் படமாகவும், மலையாளம், இந்தியில் டப் செய்யப்பட்டும் வெளியானது.

Bahubali mints Rs 50 cr plus in Karnataka

இந்த நான்கு மொழிகளிலும் கர்நாடகத்தில் பாகுபலி வெளியானது. மொத்தம் 184 சென்டர்களில் வெளியான இந்தப் படத்தைப் பார்க்க தலைநகர் பெங்களூரு மட்டுமல்லாமல், கர்நாடகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். வடக்கு கர்நாடகத்தில் கூட இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.

இந்தப் படம் வெளியாகி 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரூ 50 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது கர்நாடகத்தில் மட்டும்.

வேறு எந்த மொழிப் படமும் அங்கு இவ்வளவு வசூலைக் குவித்ததில்லை. கன்னட மொழியில் வெளியாகாத ஒரு படத்துக்கு இவ்வளவு வசூலா என பிரமிக்கின்றனர் கன்னட திரையுலகினர்.

பாகுபலி ஜுரம் இன்னும் கூட அங்கு தணியவில்லை. இதனாலேயே பல கன்னடப் பட வெளியீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரணதந்திரம் (கன்னடம்) பட இயக்குநர் ஆதிராம் தெரிவித்தார்.

 

சரித்திரம் படைக்க ஆசைப்படும் திரிஷா!

சென்னை: பாகுபலி படம் மற்றும் அதன் வெற்றி உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சத்தமில்லாமல் ஒரு மாற்றம் இந்தியத் திரையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஆமாம் சரித்திரப் படங்களின் மீது நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்களின் கவனம் திரும்பி இருக்கின்றது. தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான எஸ்.பி.ஜனநாதன் தஞ்சை பெரிய கோயிலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

I Would Love to be a Part of a Period - Warrior Film - Trisha

இதுநாள்வரை கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை த்ரிஷா தற்போது சரித்திரப் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். த்ரிஷாவின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று விசாரித்தால் எல்லாம் பாகுபலியின் தாக்கம் தான் என்கிறார்கள்.

சரித்திரப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, பாகுபலி பார்ப்பதற்கு முன்பிருந்தே எனக்கு இந்த ஆசை உள்ளது. சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும்" என்று த்ரிஷா தனது நீண்டநாள் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஜமௌலி காரு பாகுபலி 2 படத்துல த்ரிஷாவுக்கும் ஒரு ரோல் கொடுங்க...

 

எந்திரன் 2... ஷங்கரின் கதை, ஷூட்டிங் திட்டங்களுக்கு ஓகே சொன்னார் தயாரிப்பாளர்!

ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தை விட, அதற்குப் பிறகு ரஜினி நடிக்கும் எந்திரன் 2 பற்றித்தான் ஏராளமான செய்திகள் தினசரி வந்து கொண்டே இருக்கின்றன.

இந்தப் படத்தின் பட்ஜெட், ஷூட்டிங் திட்டம், படமாக்கப்படவிருக்கும் நாடுகள் போன்ற விஷயங்களை இயக்குநர் ஷங்கரிடம் கேட்டு, சம்மதமும் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

Rajini's Enthiran 2... Latest updates

இந்தப் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அய்ங்கரன் நிறுவனம் தயாரிக்கிறது. அய்ங்கரன் கருணாவிடம் இந்தப் படம் குறித்து விரிவாக விவரித்துவிட்டார் ஷங்கர். எல்லாமே அவருக்கு திருப்தியாக அமைந்ததாம்.

அடுத்து லைக்கா சுபாஷ்கரனிடம் பேச லண்டன் செல்கிறார் ஷங்கர்.

படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் ஆரம்பமாகிவிட்டன. ஷங்கர் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கத் தயாராகி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

 

தனுஷ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"காக்கா முட்டை' என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தில் வழக்குரைஞர்கள் குறித்து அவதூறான வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று கூறி சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், அகில இந்திய வழக்குரைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன் வழக்கு தொடுத்தார்.

HC orders to stop defamation case against Dhanush

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "காக்கா முட்டை' படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், வெற்றிமாறன், அந்த படத்தின் இயக்குநர் மணிகண்டன், அவதூறு காட்சியில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அதில், "காக்கா முட்டை' படத்துக்கு 2 தேசிய விருதுகளும், பல்வேறு சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளன. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக சித்திரிக்கவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அந்த வழக்கை ரத்து செய்வதோடு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் உள்பட 4 பேருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்ததோடு, இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி எதிர் மனுதாரர் மணிவண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்குத் திரும்பிய முன்னணி "தலைகள்" .. அட, கமலும்!

சென்னை: நடிகர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு மாயை நம் எல்லோரிடமும் இருக்கிறது, அதனை உடைத்து முன்வர எவரும் விரும்புவதில்லை. தோற்றம், நடை, உடை, பாவனை என்று எல்லாவற்றிலும் இளமை ததும்பும் பாடி என்றும் இளமையுடன் இருப்பவர்கள் தான், நடிகர்கள் என்ற ஒரு பிம்பம் இங்கே அனைத்து ரசிகர்களின் மனதிலும் பசுமரத்தாணி போல ஆழப் பதிந்து விட்டது.

ஆனால் சமீபகால தமிழ் சினிமாவில் பல அதிசய மாற்றங்கள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன, திருமணத்திற்குப் பின்பு சினிமாவில் நடிக்காத முன்னணி நடிகைகள் பலரும் தற்போது மீண்டும் படங்களில் தங்கள் வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர்.

 Salt & Pepper Look: Leading Actors Returning

அதே போன்று நடிகர்களிடமும் ஒரு சில மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன, ஆமாம் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம்வரத் தொடங்கி இருக்கின்றனர்.

முதன்முதலில் இந்த விஷயத்தில் நடிகன் என்ற வளையத்தை விட்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் அஜீத், நடிக்கத் தொடங்கியது மட்டுமின்றி பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் அவ்வாறே வலம்வரத் தொடங்கினார்.

அஜீத் ஆரம்பித்து வைத்த இந்த இமேஜ் தற்போது முன்னணி நடிகர்கள் வரை எதிரொலிக்கத் தொடங்கி இருக்கின்றது, ஆமாம் உலகநாயகன் கமல் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி ஆகிய இருவரும் தற்போது பொது நிகழ்ச்சிகளுக்குசால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வரத் தொடங்கி உள்ளனர்.

ரஜினி ரஞ்சித்தின் படத்திற்காக இந்த லுக்கில் தோற்றமளிப்பதாக சொல்கிறார்கள், ஆனால் கமலின் இந்த மாற்றம்தான் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஏனெனில் எப்போதுமே தனது தோற்றத்தில் அதிகக் கவனம் செலுத்துபவர் கமல், ஆனால் தற்போது லேசான தாடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் வலம்வரத் தொடங்கி இருக்கிறார்.

என்ன இந்த மாற்றமோ?

 

கலாம் மறைவு: நாடே துக்கத்தில் மூழ்கியிருக்க "பர்த் டே பார்ட்டி" கொண்டாடிய தனுஷ்!

சென்னை: இந்தியாவிற்கே துக்க இரவாக மாறிப்போனது 27ம் தேதி இரவு. நமது பாரதநாட்டின் பொக்கிஷமான அப்துல் கலாமை நாம் இழந்தது அன்றுதான். ஆனால் அந்த இரவில் நடிகர் தனுஷ் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவின ஜனாதிபதியாக ( தமிழ்நாட்டிலிருந்து 3 வது) உயர்ந்த அந்த மாபெரும் மனிதரின் மரணம் பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

Abdulkalam Died:  Dhanush Celebrating Birthday Party

ஆனால் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது பிறந்தநாள் விழாவை, மனைவி மற்றும் நண்பர்கள் புடைசூழ இனிதே கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார் நடிகர் தனுஷ்.

சிறந்த நடிகர் என்று குடியரசுத் தலைவரின் கையால் தேசிய விருதை வாங்கிய நடிகர் தனுஷ் இவ்வாறு செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய நாட்டிற்கு பெருமை தேடி தந்தவர் அப்துல் கலாம்!- இளையராஜா புகழாரம்

மக்கள் குடியரசுத் தலைவராக வாழ்ந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாம், இந்திய நாட்டுக்கே பெருமை தேடித் தந்தவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

அப்துல் கலாம் மறைவுக்கு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக இருந்த நமது ஆபஜெ அப்துல் கலாம் அவர்களின் மறைவு நம் நாட்டிற்கு நேர்ந்த பேரிழப்பு. மாளிகையில் உயர் பதவியில் இருந்தாலும் அவரது சிந்தனையெல்லாம் எளிய மக்களை பற்றியும், எதிர்கால இந்தியாவை வலிமையாக்க மாணவர்களை சந்திப்பதிலும்தான் இருந்தது. இந்த அரிய குணத்தினால் உலகத் தலைவர்களெல்லாம் இந்தியாவை பெருமையோடு பார்க்கும் நிலை வந்தது.

Ilaiyaraaja's condolence message for Dr Kalam's death

அவரது எளிமையான வாழ்க்கை எல்லோரையும் வியக்க வைத்தது. பதவியில் இருக்கும்போதும்,இல்லாதபோதும் இடைவிடாத கல்விப் பணியில் தன்னை தொடர்ந்து சேவையாற்றி வந்தார்.

உலக நாட்டுத் தலைவர்களிடையே பேசும்போது 'கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வரிகளை தமிழிலே சொல்லி தமிழ்ர்களுக்கு பெருமை தேடித் தந்தார்.

கடைசி நிமிடம் வரை மாணவர்களிடையே உரையாடிக்கொண்டிருந்தார் டாக்டர் கலாம் என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

டாகட்ர் ஆபஜெ அப்துல்கலாம் அவர்களின் மறைவு நமக்கெல்லாம் பேரிழப்பு.

 

அப்துல்கலாம் மறைவிற்கு இரங்கல்: நாளை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரையை வந்து அடைந்து அங்கிருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.

இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கபடும் கலாமின் உடல் நாளை தகனம் செய்யபடுகிறது, இதனையொட்டி நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Abdul kalam Crematoriums: Film Screening  Cancelled

இந்தியா முழுவதுமே ஆங்காங்கே துக்கம் கடைபிடிக்கப் பட்டாலும், தமிழ்நாட்டில் இதன் தீவிரம் சற்று அதிகமாகவே உள்ளது. நாளை கடையடைப்பு மவுன அஞ்சலி என்று மக்கள் "மக்களின் ஜனாதிபதிக்கு" இறுதி மரியாதையை செலுத்துகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 2 நேரம் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் அறிவித்து இருக்கிறார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் "முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பாக அமைந்து இருக்கிறது. நாளை அவரின் உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

 

பாகுபலியை தூக்கிச் சாப்பிட்ட பஜ்ரங்கி பைஜான்.. 12. நாளில் ரூ. 400 கோடியை அள்ளியது!

மும்பை: சல்மான் நடிப்பில் கடந்த ரம்ஜான் அன்று வெளியான பஜ்ரங்கி பைஜான் திரைப்படம், சத்தமில்லாமல் வசூல் சாதனை படைத்துள்ளது. 12 நாட்களிலேயே அது ரூ. 400 கோடி வசூலை ஈட்டி பாகுபலி வசூலை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டமாக வந்த பாகுபலியின் வசூலை வீழ்த்தி வசூலில் வரலாறு படைத்து வருகிறது பஜ்ரங்கி பைஜான் திரைப்படம். பாகுபலி முதல் 17 நாட்களில் சுமார் 385 கோடியை உலகம் முழுவதும் வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் 12 நாட்களிலேயே சுமார் 400 கோடியை வசூலித்து வரலாறு படைத்து இருக்கிறது பஜ்ரங்கி பைஜான்.

Box Office: Baahubali Clash With Bajrangi Bhaijaan

திரையிட்ட முதல் 2 நாட்களில் பெரிதாக வசூல் செய்யாத பஜ்ரங்கி பைஜான் அடுத்து வந்த நாட்களில் சுதாரித்துக் கொண்டது.

படத்தைப் பார்த்தவர்களின் கருத்துக்கள் படத்திற்கு ஆதரவாக மாறி சமூக வலைதளங்களில் பகிரப்பட, தற்போது வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது சல்மானின் படம்.

தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசைப் பொறுத்தவரை கடுமையான போட்டி இந்த 2 படங்களுக்குத்தான் என்று கூறுகிறார்கள். 2 படங்களில் எந்தப் படம் வசூலில் முந்தப் போகிறது என்பது தெரியவில்லை.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால் பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் 2 படங்களுக்குமே திரைக்கதை எழுதியவர் ஒருவரே. அவர் வேறு யாருமல்ல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தான்.

எனவே பஜ்ரங்கி பைஜான் வசூலில் முந்தினாலும் அதைப் பற்றி ராஜமௌலி கவலைப் படமாட்டார். அவிங்களுக்கே கவலை இல்லை. நாம ஏன் கவலைப்படனும்!

 

இந்தக் கட்டுரைக்கு தலைப்பு இல்ல ராசா...

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

ஒருவர் மீதுகொண்ட பற்றும், அன்பும் எக்காலமும் சற்றும் குறையாமல் இருப்பது என்பது என்னைப்பொருத்தவரை இசைஞானி இளையராஜா மீதுதான். ஒரு நாளும், அவரது எந்த ஒரு செய்கையாலும் அந்த எண்ணம் மாறியதே இல்லை.

திங்களன்று அவர் தனது மானசீக `அண்ணா` எம் எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்திய `என்னுள்ளில் எம்.எஸ்.வி` நிகழ்ச்சிக்கு அரங்கத்துக்கு சென்ற முதல் ஆள் நான் தான். இசைமழை துவங்குவதற்கு முன்னதாக அங்கே பேய்மழை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

டிக்கெட் வைத்திருந்தவர்கள் போக, அரங்கத்தில் டிக்கட் வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வந்து தவித்த நூற்றுக்கணக்கான ரசிகர்களைப் பார்த்தபோது, நேரு விளையாட்டரங்கில் வைத்திருக்கவேண்டிய நிகழ்ச்சியை, ராஜா இவ்வளவு சிறிய காமராஜ் அரங்கில் வைத்துவிட்டாரே என்று கவலையாக இருந்தது.

டிக்கட் கிடைக்காத சிலர் முகம் வாடிப்போனதைப்பார்த்தபோது, விட்டால் காதுகளை அறுத்து நம்மிடம் கொடுத்துவிடுவார்களோ எனும் அளவுக்கு பயமாகவும் இருந்தது. நடக்கவிருப்பது வரலாறு குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டிய நெகிழ்ச்சி அல்லவா?

சரியாக 7 மணிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குட்டியாக ஒரு முன்னுரை வழங்க, அடுத்த நிமிடமே ராஜ தரிசனம். பாடல்கள் இருக்கட்டும், இன்று ராஜா நிறைய பேசவேண்டும் என்று மனதார விரும்பினேன். என் விருப்பம் அவர் மனதை எட்டாவிட்டால் எப்படி? தனது இளமைக்காலங்களில் எம் எஸ் வி. தன்னை எங்ஙனம் ஆட்கொண்டார் என்பது குறித்து அவ்வளவு அற்புதமாக விவரித்தார்.

14 வது வயதில் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி'யைக் கேட்டு மயங்கியதையும் அக்காலம் தொட்டே அவரை மானசீக குருவாக ஏற்று இசைப் பித்தனாக மாறியதையும் அவரது மாட்டு வண்டி எம் எஸ்.வி.யால் எப்படி பாட்டு வண்டியாக மாறியது என்பதையும் உணர்ச்சி மேலிடக் கூறினார்.

Muthuramalingan's Cinemakkaran Saalai

எளிமையான ஆர்கெஸ்ட்ரா. பிரபலமான பாடகர்களை அழைக்கவில்லை. சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு இல்லை என்னும் ராஜதர்பார் அமலில் இருந்தது. எம்.எஸ்.வி. அறிமுகமான 'உலகே மாயம் வாழ்வே மாயம்' பாடலில் தொடங்கி 'படகோட்டி` பாட்டுக்கு பாட்டெடுத்து' வரை சுமார் 25 பாடல்கள் இசைக்கப்பட்டன. 'மயக்கமா கலக்கமா' உள்ளிட்ட சில பாடல்களை ராஜாவே தனது மந்திரக் குரலில் பாடினார்.

சுமார் மூன்றேகால் மணிநேரம் நடந்த நிகழ்ச்சியின் போது, கச்சேரி 10 மணியைத்தாண்டியபோதும் யாரும் தங்கள் கடிகாரத்தை, குறிப்பாக 9.50க்குக்கூட பார்க்கவில்லை!

எம்ஜிஆரின் `பாட்டுக்கு பாட்டெடுத்து` பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறோம். அன்று இசைக்கப்பட்ட போது ரசிகர்கள் ஏதோ புதுசாய்க் கேட்பது கைதட்டி ரசித்துக் கேட்டார்கள்.

'இன்னைக்கும் யாரும் போடமுடியாத அபூர்வமான மெட்டு இது. சரணத்துல தொகையறா.. அதுக்கு எதிர் சரணம்னு அந்தக்காலத்துலயே எப்பிடி டியூன் போட்டிருக்கார் பாருங்க எங்க அண்ணா' என்று ராஜா முன்னுரைத்த பிறகுதான் பலருக்கு அப்பாடலின் அருமையே தெரிந்தது.

அக்கூட்டத்தில் என்னை வியக்கவைத்த ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். அவர் பெயர் சிவாஜிராவாம். மற்றவர்களைப் போலவே அவருக்கும் அழைப்பு இல்லை. ஆனாலும் வந்திருந்தார். நிகழ்ச்சி துவங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்பே வந்திருந்து, ஒவ்வொரு பாடல் இசைக்கப்பட்டபோதும் ராஜாவை அவ்வளவு பரவசமாய்ப் பருகிக்கொண்டே இருந்தார்.

அவருக்கு சில இருக்கைகள் தள்ளியே நான் அமர்ந்திருந்தேன். ரஜினியை அன்று நான் அவ்வளவு நேசித்தேன். அவ்வப்போது ராஜா மேடையிலிருந்தபடியே 'சொல்லுங்க சாமி.. சொல்லுங்க' என்றபடி அவருடன் உரையாடிக்கொண்டே இருந்தார்.

பின்னர் எம்.எஸ்.வி குடும்பத்தினருக்கு நிதி அளிக்க மேடைக்கு அழைக்கப்பட்டபோது அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டவராய் ராஜாவை இறுகத் தழுவி கண் கலங்கியபோது அவர் சூப்பர்ஸ்டாராய் அல்ல ஒரு குழந்தையைப்போல் காணப்பட்டார்.

இணையங்களில் சில சில்லரைப் பயல்கள் ராஜா காசுக்கு ஆசைப்பட்டு அந்த நிகழ்ச்சியை நடத்துவதாய் எழுதியிருந்ததை நீங்களும் படித்திருப்பீர்கள்.

எங்கள் ராஜாவைப்போல் சக கலைஞனை உச்சிமுகர்ந்து பாராட்டும் மனம் வாய்க்கப் பெற்றவர்கள் அரிதினும் அரிது. அதிலும் சினிமாக்காரர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

அந்த வகையில் ராஜா நடத்திய அந்த நிகழ்ச்சி வரலாறு குறிப்பெடுத்துக்கொண்ட அரிய நெகிழ்ச்சி. அந்த இறுமாப்போடு சொல்கிறேன்... தமிழனுக்கு ஒரே ராஜா எங்கள் இளையராஜாதான்!

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com