பாகுபலி படம் பார்க்க லீவு தாங்க பாஸ்.... இணையத்தில் வைரலாகும் லீவ் லெட்டர்!

|

ஹைதராபாத்: இந்தியாவில் மிக அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூலை 10 ம் தேதி வெளியாகிறது.

250 கோடி செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது, இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுதும் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படமும் இதுதான்.

பல முறை வெளியீட்டுத் தேதி அறிவித்தும் படத்தை வெளியிட முடியாமல் போய்விட்டது, இப்போது ஒருவழியாக 10 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு பல கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்வோர் ஒட்டுமொத்தமாக லீவ் எடுத்துக் கொண்டு படத்தைப் பார்க்க இருக்கின்றனராம்.

குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பாகுபலி படத்தின் முதல் காட்சியை பார்க்க வேண்டி பலரும் முன்பதிவு செய்து வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் முதல் காட்சியை பார்ப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி தங்கள் லீவ் பற்றி பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

கூட்டம், கூட்டமாக கல்லூரி மற்றும் அலுவலங்களில் வேலை செய்வோர் விடுமுறை எடுக்க இருக்கின்றனர், இதில் இவர்கள் யாரும் விடுமுறைக் கடிதம் எழுத தேவையில்லை. ஏன் தெரியுமா இணையத்திலேயே ஒரு லீவ் லெட்டர் ஒன்று உலா வருகின்றது.

ரசிகர்கள் விடுமுறை எடுக்கப் போகும் போது கைவலிக்க அமர்ந்து கடிதம் எழுத வேண்டியது இல்லை, இணையத்தில் இந்த லெட்டரை டவுன்லோட் செய்து வெறும் கையெழுத்து மட்டும் இட்டால் போதுமானது. அந்தக் கடிதத்தில் என்ன காரணம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

வணக்கம் சார் வருகின்ற வெள்ளிக்கிழமை எனக்கு விடுமுறை வேண்டும். நான் வரவில்லை என்றால் வேலைகள் பாதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும் ஆனால் நான் ஒரு நல்ல காரணத்திற்காகத் தான் விடுமுறை கேட்கிறேன்.

இந்தியாவில் மிகவும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் பாகுபலி படத்தை முதல் நாள் முதல் காட்சி நான் பார்க்கப்போக வேண்டும் அதற்காகத் தான் நான் விடுமுறை கேட்கிறேன். இந்தப் படத்தை பார்ப்பதற்காக நான் பல வருடங்கள் காத்திருந்து தற்போதுதான் அதற்கான வாய்ப்பு வந்து உள்ளது.

நீங்கள் எனது கடிதத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றி, இந்த விடுமுறையை நான் எடுத்துக் கொண்டு பாகுபலி படத்திற்கு செல்கிறேன் என்ற ரீதியில் அமைந்துள்ளது இந்தக் கடிதம்.

தற்போது இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது இந்த லீவ் லெட்டர், இதற்கு முன்பு லிங்கா படம் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது இந்த மாதிரி லீவ் லெட்டர் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment