மும்பை: அரசியல்வாதி பாபா சித்திக்கி அளித்த இஃப்தார் விருந்துக்கு வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானின் காரில் யாரோ ஒரு பெண் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பெண் யார் என தெரியவில்லை.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் படங்களை பற்றி மக்கள் எவ்வளவு பேசுகிறார்களோ அதே அளவுக்கு அவரின் காதல், காதலிகள், திருமணம் பற்றியும் பேசுகிறார்கள். ஏனென்றாரல் இன்னும் திருமணமாகாத சல்மான் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாகவே உள்ளது.
இந்நிலையில் தான் சல்மான் பெரியோர்களாக பார்த்து நிச்சயிக்கும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி பாபா சித்திக்கி கடந்த 5ம் தேதி மாலை மும்பையில் இஃப்தார் விருந்து கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார்.
இஃப்தார் விருந்துக்கு நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸும் வந்திருந்தார். அவர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். சல்மானுக்கும் ஜாக்குலினுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
விருந்து முடிந்து சல்மான் அங்கிருந்து கிளம்புகையில் அவரது காரில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவருடன் சல்மான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். காரில் இருந்த பெண் யார் என்று தெரியவில்லை. இதை பற்றி தான் பாலிவுட்டில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Post a Comment