கேரளத்து மங்கைகளுக்கு சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் தமிழக ரசிகர்கள் எப்போதுமே பச்சைக்கம்பளம் விரித்து வரவேற்பார்கள். (எவ்வளவு நாள்தான் சிவப்பு கம்பளம்னு சொல்றது) டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ஜெயாடிவியில் அறிமுகமாகி சன்மியூசிக்சில் கலக்கிய நிஷா இப்போது பிரபல சீரியல்களில் வில்லியாக வலம் வரும் வருகிறார்.
தெய்வம் தந்த வீடு சீரியலின் டெரர்லுக் வில்லி... ஓர கத்தியை ஓரம் கட்ட நினைத்து அடிக்கடி மொக்கை வாங்கும் ப்ரியாவாக நடித்து வரும் நிஷா ஒரு பொறியியல் பட்டதாரியாம்.
இன்ஜினியரிங் படித்தாலும் மீடியாதான் தனக்கு செட் ஆகும் என்று முடிவெடுக்கவே வீட்டிலும் ஓகே சொல்லவே கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து விட்டார் நிஷா வந்த வேகத்தில் ஜெயா டிவி, சன் டிவி என்று வலம் வந்து இப்போது ஸ்டார் விஜய் டிவியில் வில்லத்தனம் செய்து வருகிறார் நிஷா.
சீரியலில் வில்லத்தனம் செய்தாலும் உண்மையில் ரொம்ப அமைதியாம். நிஷா நடிப்பில கலக்குறடி என்று தோழிகள் சொல்வது சந்தோஷமா இருக்கு என்கிறார் நிஷா.
Post a Comment