திருவனந்தபுரம்: பிரேமம் பட விவகாரத்தில் வரும் 9 ம் தேதி கேரளாவில் உள்ள தியேட்டர் அதிபர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சுமார் 380 தியேட்டர்கள் அன்று காலை 9 மணியில் இருந்து மூடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பஷீர் கூறுகையில் பெருகிவரும் திருட்டு விசிடி மற்றும் பிரேமம் படம் ஆகியவற்றுக்காக இந்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுகிறோம், இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஒரு நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
9 ம் தேதி ஆரம்பிக்கும் இந்தப் போராட்டம் அன்றோடு முடியாமல் தொடர்ந்தால் பெரிதும் பாதிக்கப் படப்போவது யார் தெரியுமா? வேறு யாருமில்லை பாகுபலி படம்தான். கேரளாவில் தமிழ் பாகுபலி படத்தை வெளியிடுகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
கேரளாவில் நல்ல வரவேற்பைப் படம் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, இந்த ஸ்டிரைக் இடையில் வந்து தற்போது பிரச்சினையை உண்டு பண்ணியுள்ளது பாகுபலிக்கு. பார்க்கலாம் சொன்னபடி கேரளாவில் பாகுபலி திரைப்படம் வெளியாகிறதா அல்லது தடையாகிறதா? என்று.
Post a Comment