பிரசாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘சாஹசம்' படத்தின் பாடல் காட்சிகள் மலேசியா மற்றும் ஜப்பானில் படமாக்கப்பட்டது.
இப்படத்தில் அமண்டா என்ற புதுமுக நாயகி அறிமுகமாகியிருக்கிறார். மேலும், பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
நாசர், தம்பி ராமைய்யா, சோனு சூட், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் மிகவேகமாக உருவாகி வரும் இப்படத்தின் இரு பாடல்களை மலேசியா மற்றும் ஜப்பானில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.
கடந்த 20 நாட்களாக இவ்விரு நாடுகளிலும் இப்பாடல்களை படமாக்கியுள்ளனர். மலேசியாவில் ‘சாயாங் கு' என்ற பாடலுக்கு பிரசாந்துடன் இந்தியாவிலிருந்து சென்ற 20 நடன கலைஞர்களுடன் மலேசிய நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து ‘ஆங்கிரி பேர்ட்' என்ற பாடலை ஜப்பானில் 8 நாட்கள் படமாக்கியுள்ளனர். ஜப்பானில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுமிக்க இடங்களில் பிரசாந்த், அமண்டா இணைந்து நடனமாடும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். இந்த பாடலை இந்தியாவின் தலைசிறந்த பாடகரான மோஹித் சவுகான் பாடியுள்ளார்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தியாகராஜன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமில்லாமல், ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
Post a Comment