வருமான வரித்துறை ரெய்ட் குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை கோபத்துடன் திட்டி வெளியேற்றினார் நடிகை சமந்தாவின் அம்மா.
நடிகை சமந்தாவின் வீடு சென்னை பல்லாவரத்தில் உள்ளது. இங்குதான் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சினிமாவில், விளம்பரங்களில் சம்பாதித்த பணத்துக்கு சமந்தா முறையாக வரி செலுத்தவில்லை என்று கூறி இந்த சோதனையை மேற்கொண்டனர் அதிகாரிகள்.
இதனைக் கேள்விப்பட்டு, அவரது வீட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்றனர் நிருபர்கள்.
அவர்களை ஆங்கிலத்தில் திட்டியபடி, விரட்டியடிக்க முனைந்தார் சமந்தாவின் தாயார். "உங்களுக்கு இங்கே வேலையில்லை... வெளியே போங்கள்" என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும்போதே, உள்ளேயிருந்து வேகமாக வந்த சமந்தாவின் சகோதரர் செய்தியாளர்களைத் தாக்க ஆரம்பித்தார்.
இதனால் பதிலுக்கு அவரைத் தாக்க செய்தியாளர்கள் முனைந்தபோது, அவர் உள்ளே ஓடிவிட்டார். அவரை வெளியே வருமாறும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப் போவதாகவும் செய்தியாளர்கள் கூற, உடனே செய்தியாளர்கள்தான் தாக்கியதா அடாவடியாகப் பேச ஆரம்பித்துவிட்டார் சமந்தாவின் தாயார்.
அதன் பின்னர் சமந்தாவின் தந்தை பிரபு வெளியில் வந்து, வரிமான வரி குறித்து விளக்கம் கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டார்.
Post a Comment