விஜயின் புலி, பிரபாஸின் பாகுபலியை "இந்த" விஷயங்களில் முறியடிக்குமா?

|

சென்னை: அது வேற இது வேற, பாகுபலியுடன் புலி திரைப்படத்தை ஒப்பிடாதீர்கள் என்று இயக்குநர் சிம்புதேவன் முதல் ஹன்சிகா வரை கூறினாலும் கூட, பாகுபலி படத்துடன் புலியை ஒப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.

Puli (Hindi) (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒருவழியாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை உலகமெங்கும் விஜயின் புலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இடையில் இன்று காலை விஜய் வீட்டில் நடந்த ரெய்டு கூட படத்திற்கு பப்ளிசிட்டியாகவே மாறிவிட்டது.

Box Office: Vijay's 'Puli' Break Rajamouli's 'Baahubali' Record?

இந்நிலையில் பாகுபலி படம் தென்னிந்தியாவில் இருந்து வெளியாகி உலகமெங்கும் பல்வேறு சாதனைகளைப் புரிந்தது. அவற்றில் குறிப்பிட்ட சில சாதனைகளை புலி முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

பாகுபலி படத்தின் இந்த சாதனைகளை புலி திரைப்படம் முறியடிக்குமா? என்று பார்க்கலாம்.

அதிகத் திரையரங்குகள்

தென்னிந்தியாவில் உருவான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான இத்திரைப்படம் சுமார் 20க்கும் மேலான நாடுகளில் 500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை புரிந்தது. மேலும் எந்திரன் மற்றும் ஐ போன்ற திரைப்படங்களின் வரலாற்றையும் முறியடித்தது பாகுபலி.

பிரீமியர் ஷோவில்

பாகுபலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அமெரிக்காவில் சுமார் 118 திரையரங்குகளில் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இந்த காட்சி மூலம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி, மேலும் அமீர்கானின் "பிகே" படத்தின் வரலாற்றையும் முறியடித்தது பாகுபலி.

உலகளவில் மிகப்பெரிய ஓபனிங்

உலகளவில் சுமார் 75 கோடிகளை வெளியான முதல் நாளே வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. இதற்கு முன்பு தென்னிந்திய மொழியில் வெளியாகி அதிக வசூலைப் பெற்ற ரஜினியின் எந்திரன் திரைப்படத்தின் வசூலை முறியடித்தது பாகுபலி.

வேகமான 100 கோடி

வெளியான 2 தினங்களில் உலகளவில் சுமார் 135 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. ஒரு இந்தியப் படம் உலகளவில் வேகமாக 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது இதுவே முதல்முறை.

5 நாட்களில் 200 கோடி

பாகுபலி வெளியான 5 நாட்களில் உலகளவில் சுமார் 213 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. ஒரு தென்னிந்தியப் படம் வேகமாக 200 கோடிகளை வசூலித்தது இதுவே முதல்முறை.

எந்திரனின் வரலாற்றை

வெளியான முதல் வாரத்தில் சுமார் 255 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. மேலும் எந்திரன் படத்தின் மொத்த வசூலையும் சுமார் 7 நாட்களில் முறியடித்து சாதனை புரிந்தது படம்.

ஹிந்தியில் மட்டும் 100 கோடி

ஹிந்தி மொழியில் வெளியான பாகுபலி ஹிந்தியில் மட்டும் சுமார் 120 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. தென்னிந்திய மொழியில் உருவான பாகுபலி ஹிந்தியில் டப் செய்யப்பட்டு 100 கோடி கிளப்பில் இணைந்தது, பாலிவுட்டில் மாபெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

மேலே சொன்ன சாதனைகளை புலி திரைப்படம் முறியடித்தால், இந்திய சினிமா வரலாற்றில் புலியுடன் விஜயின் பெயரும் இடம்பெறும். பாகுபலியின் வரலாற்றை புலி முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Post a Comment