சிம்பு அனுஷ்காவின் சூப்பர் டான்ஸ்!
12/17/2010 2:21:34 PM
'வானம்' படத்துக்காக, ஒரே ஒரு பாடலை வெளியிட்டு புதுமை படைத்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் பாஸ்ட் பீட்டில், 'எவன்டி உன்னை பெத்தான்… பெத்தான்…' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்கு சிம்பு என்கிற எஸ்.டி.ஆருடன் டான்ஸ் போட்டிருக்கிறார் அனுஷ்கா. ஒரிஜினலான தெலுங்கு 'வேதம்' படத்தில் இப்படியொரு காட்சி கிடையாதாம். ரீமேக் என்பதால் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இதை சேர்த்திருக்கிறார்கள். பாடல் ஏற்கெனவே எஃப்.எம்.களில் ரவுண்ட் கட்டிக்கொண்டிருக்கிறது. பாடலை எழுதியிருக்கும் சிம்பு, 'தமிழ் ரசிகர்களுக்கு 'வானம்' புதிய அனுபவமாக இருக்கும்' என்கிறார்.
Source: Dinakaran
Post a Comment