12/16/2010 5:40:00 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
இந்தியில் நடித்து வரும் சென் நடிகைக்கு தமிழில் சில வாய்ப்புகள் வந்துச்சாம். ஆனா, அதை ஏத்துக்க நடிகை மறுத்துட்டாராம்… மறுத்துட்டாராம்… எல்லாமே சின்ன பட வாய்ப்புகளாம். சின்ன படங்கள்ல நான் நடிச்சதே கிடையாது. செகண்ட் ஹீரோயினா நடிச்சாலும் அதுல பிரபல ஹீரோ இருந்தாத்தான் நடிப்பேன்னு பிடிவாதமா சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்…
திரும்ப முழு வீச்சா நடிக்க வந்துட்டாரு நயன நடிகை. படங்களோடு சேர்த்து, விளம்பரங்கள்ல நடிக்கவும் மும்முரமா முயற்சி பண்றாராம்… பண்றாராம்… தெரிஞ்ச விளம்பர நிறுவனங்கள்கிட்ட மேனேஜர் மூலமா பேச்சு நடத்துறாராம்… நடத்துறாராம்…
அமல நடிகை, விமலான நடிகர் கூட ரெண்டு படங்கள்ல நடிக்கப் போறாரு. ரெண்டு பட ஷூட்டிங்கும் இன்னும் தொடங்கல… தொடங்கல… ஆனா ரெண்டு பேரோட நட்பும் தொடங்கிடுச்சாம்… தொடங்கிடுச்சாம்… நடிகைக்கு அடிக்கடி போன் பண்ணி நடிகரு கடலை போடுறாராம்… கடலை போடுறாராம்…
Post a Comment